குக் வித் கிறுக்கு நிகழ்ச்சியில் பாண்டியன் ஸ்டோர் ரசிகர்களின் கிரஷ் நடிகை.! உச்சகட்ட கொண்டாட்டம்

pandiyan-store
pandiyan-store

விஜய் டிவியில் ரசிகர்களை கவரும் வகையில் பல சீரியல்கள் மற்றும் ஷோக்கள் போன்றவற்றை ஒளிபரப்பி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கட்டிப் போட்டு வருகிறார்கள். விஜய் டிவி பிரபலம் அடைவதற்கு முக்கிய காரணம் எந்த நிகழ்ச்சி அல்லது சீரியலாக இருந்தாலும் காமெடி மற்றும் சுவாரஸ்யம் இரண்டையும் மையமாக வைத்து இயக்கி வருகிறார்கள்.

இதன் காரணமாகவே ரசிகர்கள் ஆவலுடன் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் மற்றும் ஷோக்கள் அனைத்தையும் பார்த்து வருகிறார்கள். அந்த வகையில் உலகம் முழுவதும் ஃபேமஸான ஒரு நிகழ்ச்சி குக் வித் கோமாளி.

இந்நிகழ்ச்சி காமெடி ஒன்றை மட்டுமே மையமாக வைத்து இயக்கப்படுவதால் ஒட்டுமொத்த ரசிகர்களும் இந்நிகழ்ச்சிக்கு அடிமையாகி உள்ளார்கள். இந்த நிகழ்ச்சி இரண்டு வருடங்களாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் தற்போது சீசன் 2 நிறைவு பெறவுள்ளது.

இந்நிலையில் சீசன் 3-கான முதற்கட்ட வேலைகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்பொழுது பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபல நடிகை ஒருவர் குக் கோமாளி கிறுக்கு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள போறேன் என்று கூறியுள்ளார்.

அதாவது விஜய் டிவியில் தொடர்ந்து டிஆர்பி-யில் முன்னணி  நாடகமாக வலம் வந்து கொண்டிருப்பது பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது.  இந்த சீரியல் 4அண்ணன்- தம்பிகள் மற்றும் கூட்டுக்குடும்பம் இந்த இரண்டையும் மையமாக வைத்து இயக்கப்படுவதால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

இந்த சீரியல் தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு,கன்னடம்,மராத்தி, ஹிந்தி  போன்ற மொழியிலும் ரீமேக் செய்யப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் இந்த சீரியல் துவங்கப்பட்ட காலகட்டத்தில் ஹேமாவிற்கு பதிலாக மீனா கேரக்டரில் கவிதா கௌடா  தான் நடித்து வந்தார்.

kavitha gavta
kavitha gavta

பிறகு இவர் கன்னட பிக்பாஸில் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இந்த சீரியலில் இருந்து விலகிவிட்டார். இந்நிலையில் தற்போது இவர் கன்னட குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கு பெற உள்ளார். இவ்வாறு இந்நிகழ்ச்சியின் புரோமோ வெளியாகி  ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.அந்தவகையில் கன்னடத்தில் குக் வித் கிறுக்கு என்று நிகழ்ச்சிக்கு பெயர் வைத்துள்ளார்கள்.