புது காரை சுற்றி அலைமோதும் ரசிகர்கள் கூட்டம்.! திக்குமுக்காடிய புகழ்.! என்ன செய்தார் பார்த்தீர்களா..

விஜய் டிவி சன் டிவி மற்றும் ஜி தமிழ் போன்ற தொலைக்காட்சிகளை விட நல்ல தரமான கதை உள்ள சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி ஷோக்கள் போன்றவற்றை ஒலிபரப்பி வருகிறது. இதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் விஜய் டிவி மாபெரும் வெற்றியை பெற்று வருகிறது.

ரசிகர்கள் மத்தியில் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட பெரும் ஆதரவைப் பெற்று வரும் ஷோ குக் வித் கோமாளி இந்நிகழ்ச்சி. முதல் சீசன் முடிந்த நிலையில் தற்போது இரண்டாவது சீசன் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

இந்நிகழ்ச்சிக்காக உலகம் முழுவதும் ரசிகர்கள் இருந்து வருகிறார்கள். நிகழ்ச்சி இந்த அளவிற்கு பிரபலம் அடைவதற்கு காரணம் நிகழ்ச்சியில் பங்கு பெற்று வரும் கோமாளிகள் தான். இந்நிகழ்ச்சியில் பங்கு பெற்று வரும் அனைத்து கோமாளிகளுமே தனது சிறந்த காமெடியை கூறி மிகவும் மகிழ்ச்சியாகவும்,காமெடியாகவும் கொண்டு செல்கிறார்கள்.

அந்த வகையில் புகழ் இந்நிகழ்ச்சியின் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலம் அடைந்துள்ளார். தற்போது இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் உருவாகியுள்ளது. இவர் 2008ஆம் ஆண்டு வெறும் 500 ரூபாயை வைத்துக் கொண்டு வேலை தேடி சென்னைக்கு வந்திருக்கிறார். இவருக்கு வேலை வாங்கி தருவதாக கூறி சிலர் ஏமாற்றி விடுவார்கள்.பிறகு மெக்கானிக் கடையிலும் பின்னர் வாட்டர் வாஷ் கடையிலும் வேலை செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் பானா காத்தாடி படத்தில் நடித்த உதயராஜ் உடன் நட்பு ஏற்பட்டு இருக்கிறது. இதன் மூலம் கலக்க போவது யாரு சீசன் 6 நிகழ்ச்சியில் உதவி இயக்குனராக பணியாற்றி இருக்கிறார். அந்த செட்டில் இவர் மிகவும் காமெடியாக அனைவரையும் கலாய்த்து வந்ததால் இந்நிகழ்ச்சியில் பங்கு பெற வாய்ப்பு கிடைத்தது.

நிகழ்ச்சியில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி சிரிச்சா போச்சு,அது இது எது போன்ற பல நிகழ்ச்சிகளில் பங்கு பெற்று வந்தார்.  இதன் மூலம்தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது.

தற்போது இவர் வெள்ளித்திரையில் பல முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்து வருகிறார். இவ்வாறு தனது கடின உழைப்பினால் உயர்ந்த புகழ் சில தினங்களுக்கு முன்பு தனது சொந்த உழைப்பால் கார் ஒன்றை வாங்கியுள்ளார். இதுதான் என் பரம்பரையிலேயே முதல் கார் என்று கூறி புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார்.

இந்நிலையில் சமீபத்தில் வாங்கியுள்ள காரில் சென்ற பொழுது அதனை பார்த்த ரசிகர்கள் அவரின் காரை போக விடாமல் சுற்றிவளைத்து கை கொடுத்து உள்ளார்கள்.அவ்வபோது எடுத்த வீடியோ தற்போது இணையதளத்தில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது. இதோ அந்த வீடியோ.