விஜயின் அரபி குத்து பாடலை கேட்டு அசந்துப்போய் நின்ன மக்கள் கூட்டம் – எங்கு தெரியுமா.?

vijay
vijay

தளபதி விஜய் தற்போது பெயர் வைக்கப்படாத தனது 66வது படத்தில் தெலுங்கு இயக்குனர் வம்சி உடன் முதல் முறையாக கைகோர்த்து நடித்து வருகிறார். இந்த படத்தை பிரம்மாண்ட பொருட்செலவில் தில் ராஜு தயாரித்து வருகிறார். படத்தில் விஜயுடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஷாம் போன்ற பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

விஜயின் 61 வது படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடந்துவருகிறது இந்த நிலையில் படத்தை அடுத்தாண்டு பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டு உள்ளது. இந்த படத்தை தொடர்ந்து விஜய் அடுத்து நடிக்க உள்ள தனது 67வது திரைப்படத்திலும் இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் இரண்டாவது முறையாக கைகோர்த்துள்ளார்.

இவர்கள் இருவரும் மாஸ்டர் திரைப்படத்தில் இணைந்து பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் கடைசியாக உருவாகி வெளிவந்த திரைப்படம் பீஸ்ட். படம் வெளிவருவதற்கு முன்பே படத்திலிருந்து அரபி குத்து பாடல், ஜாலியோ ஜிம்கானா போன்ற பாடல்கள் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் செம ட்ரென்ட் ஆகியது.

ஆனால் படம் வெளிவந்து ரசிகர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை மேலும் பீஸ்ட் படம் திரையரங்கில் மோசமான வரவேற்பை பெற்று வந்தது. இயக்குனர் நெல்சனின் வழக்கமான பாணியில் பீஸ்ட் படம் அமையவில்லை என்றும் இயக்குனரையும் பலரும் குறை கூறினர்.

இந்த படத்தின் பாடல்களை அனிருத் இசையமைத்துள்ளார் இந்த நிலையில் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள அரபி குத்து  பாடலை வெளிநாட்டில் ஒரு இளம்பெண் தெருவில் நின்று வயலின் வாசித்து அசத்தி உள்ள வீடியோ தற்போது சமூக வலைதளப் பக்கங்களில் விஜய் ரசிகர்கள் மத்தியில் டிரெண்ட் ஆகி வருகின்றன. இதோ அந்த வீடியோ நீங்களே பாருங்கள்.