“தீனா” படத்தை பார்க்க திரையரங்கில் குவிந்த கூட்டம் – பார்த்து நொந்து போன விஜய் பட தயாரிப்பாளர்.! பின் விஜய் சொன்ன வார்த்தைகள் என்ன தெரியுமா.?

தமிழ் சினிமாவில் 90 -களில் இருந்து இப்போது வரைக்கும் தொடர்ந்து பல்வேறு சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து அசத்தி வருபவர்கள் அஜித் மற்றும் விஜய் இவர்கள் இருவரும் ஒரே ஒரு திரைப்படத்தின் மூலமே இணைந்து நடித்தனர்.

அதன்பின் இருவரும் தனித்தனியாக படங்களில் நடித்து வெற்றிகளை குவித்தனர். அதன் காரணமாக தமிழ் சினிமாவில் இப்போ உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கின்றனர். இப்போ அஜித் வலிமை திரைப்படத்தை தொடர்ந்து தனது 61 – வது திரைப்படத்தில் நடிக்க ரெடியாக இருக்கிறார்.

விஜய் “பீஸ்ட்” படத்தின் சூட்டிங்கை வெற்றிகரமாக முடித்துள்ளார் டப்பிங் பணிகளை முடித்துவிட்டு அடுத்ததாக தெலுங்கு இயக்குனர் வம்சி உடன் கைக்கோர்த்து. தனது 66 – வது திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் இப்படி இருக்கின்ற நிலையில் இருவரும் இதுவரை பல முறை படங்களின் மூலம் மோதி உள்ளனர்.

கடந்த 2001 – ஆம் ஆண்டு ஜனவரி 14 ம் தேதி அஜீத், விஜய் படங்கள் ஒரு தடவை நேருக்கு நேர் மோதி உள்ளது. அஜித்தின் தீனா, விஜயின் ப்ரண்ட்ஸ் ஆகிய படங்கள் திரையரங்கில் ஒரே நாளில் வெளியாகின ஆரம்பத்தில் அஜித்தின் தீனா படத்தின் கூட்டத்தை பார்த்து விஜய் படத்தை தயாரித்த தயாரிப்பாளர் அதிர்ந்து போனார் அந்த அளவிற்கு திரையரங்கம் நிரம்பி வழிந்தது இதை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார்.

ஆனால் விஜய்யோ இந்த வாரத்தை விடுங்கள் அடுத்த வாரத்தில் நம்ம படம் தான் ஜெயிக்கும் என சொன்னார் அவர் சொன்னபடியே படம் எதிர்பார்த்த அளவிற்கு அடுத்த வாரத்தில் பிரண்ட்ஸ் படம் நல்ல வரவேற்பு கிடைத்ததால் விஜய் சொன்னது போலவே நடந்ததால் தயாரிப்பாளரும் சந்தோஷம் அடைந்தாராம்.