இந்திய அணியில் சிறந்த ஆட்டக்காரராக சமீப காலமாக இருந்து வருவர் கேஎல் ராகுல். 20 ஓவர், ஒருநாள் தொடர் மற்றும் டெஸ்ட் போட்டி ஆகிய அனைத்திலும் தனது சிறந்த பங்களிப்பை கொடுத்து தனது திறமையை மென்மேலும் வெளிக்காட்டி வருவதால் தற்போது கிரிக்கெட் ரசிகர்கள் பிடித்து போனவராக கே. எல். ராகுல் இருந்து வருகிறார்.
இந்திய அணியில் இவர் சமீப காலமாக துவக்க வீரராக களமிறங்கிய அசத்துகிறார் என்பது குறிப்பிடத்தக்கது இவரது ஒவ்வொரு டிபன்ஸ் மற்றும் ஷாட்கள் ஒவ்வொன்றும் நேர்த்தியாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் இவர் இந்திய அணியில் நீண்ட தூரம் பயணிப்பதோடு மட்டுமில்லாமல் சிறப்பான ஒரு பெயர் எடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படி இருக்கின்ற நிலையில் தற்போது நடக்கின்ற 20 ஒரு உலகக் கோப்பை போட்டியிலும் தனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி சிறப்பாக ஜொலித்து வரும் கேஎல் ராகுல் நிஜவாழ்க்கையில் பிரபல நடிகரின் மகளுடன் சுற்றித்திரிந்து வருகிறார். ஹிந்தி சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சுனில் ஷெட்டியின் மகள் உடன் சுற்றித்திரிந்து வருகிறார் என்ற தகவல் சமிபத்தில் பேசப்பட்டு தான் வந்தது.
இப்படி இருக்கின்ற நிலையில் நடிகர் சுனில் ஷெட்டியின் மகள் அதியா ஷெட்டி யின் பிறந்தநாளை முன்னிட்டு கிரிக்கெட் வீரர் கே எல் ராகுல் அதியா ஷெட்டி உடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்தார்.
அதுவும் எப்படி தெரியுமா.. கே. எல். ராகுல் “மை லவ்” என்று கூறியுள்ளார் இச்செய்தி தற்போது பலருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது அந்த புகைப்படம் மேலும் மேலும் ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது. இதோ நீங்களே பாருங்கள்.