கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை கிரிக்கெட் வீரர்கள் இந்த 7 வழிமுறையை கடைபிடிக்க வேண்டும் பிசிசிஐ அதிரடி அறிவிப்பு.

cri
cri

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது, இதனால் பல வழிகளில் பொருளாதாரம் பாதிக்கப்பட்டு வருகிறது, அந்த கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வைரலாகி வருகிறது.

இந்த நிலையில் விரைவில் ஐபிஎல் போட்டி தொடங்க இருக்கிறது, ஆனால் இந்த கொரோனா வைரஸ் அதிகரிப்பதால் ஐபிஎல் போட்டி தொடங்குமா தொடங்காத என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். கொரோனா வைரஸ் ன்னெச்சரிக்கைக்காக இந்தநிலையில் ரசிகர்களுக்கு ஏழு வழிமுறைகளை பிசிசிஐ அறிவித்துள்ளது.

முதலில் வீரர்கள் அனைவரும் சோப்பு போட்டு தங்களது கைகளை குறைந்தது இருபது நிமிடமாவது கழுவ வேண்டும்.

கையை சுத்தம் செய்வதற்காக திரவத்தை பயன்படுத்தவும் கூறியுள்ளார்கள், தும்பல் இரும்பல் எதுவாக இருந்தாலும் வாயை மறைத்துக் கொள்ள வேண்டும்.

காய்ச்சல் அறிகுறி இருந்தால் உடனடியாக மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும், அதுபோல் கையை கழுவுவதற்கு முன்பு முகம் வாய் மூக்கை தொடுவதை தவிர்க்க வேண்டும்.

வெளி உணவகங்களில் சுகாதாரமற்ற வகையில் தயாரிக்கப்படும் உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்கவும்.

வெளியாட்கள் உடன் நெருக்கமாக அமர்ந்து பேசுவது, கை குலுக்குவது ரசிகர்களுடன் செல்பி எடுப்பது என அனைத்தையும் தவிர்க்க வேண்டும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.