தெலுங்கு திரைப்பட இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் அவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படம் வருகின்ற ஜனவரி 12ஆம் தேதி வெளி வர காத்திருக்கிறது. இதற்கான பிரமோஷன் நிகழ்ச்சி தற்போது மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து வாரிசு திரைப்படத்திலிருந்து வெளியான மூன்று பாடல்களும் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
மேலும் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த 24ஆம் தேதி சென்னை நேரு உள் அரங்கில் மிகப் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது. இதில் ஏராளமான பொருட்கள் சேதம் அடைந்தது என்பதை நாம் பாத்திருப்போம். இதனை அடுத்து வாரிசு படத்துடன் துணிவு திரைப்படம் மோத உள்ளதால் இரண்டு படங்களும் போட்டி போட்டுக் கொண்டு தீவிரமாக பிரமோஷனில் இறங்கி கலக்கி வருகிறது.
இந்த நிலையில் வாரிசு படத்தில் இருந்து பாடல்கள் மட்டும் வெளியாகிய நிலையில் டீசர் எப்போது வெளியாக உள்ளது என்று பல ரசிகர்கள் காத்திருந்தனர். அவர்களுடைய எதிர்பார்ப்பை உற்சாகமாக மாற்றியது. அதாவது வாரிசு படம் வெளியாவதற்கு இன்னும் குறுகிய காலங்கள் இருப்பதால் டீசரை வெளியிடாமல் நேரடியாக ட்ரைலரை வெளியிடுகிறது. இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார்கள்.
ஆனால் படத்தின் ட்ரெய்லர் குறித்து எந்த ஒரு அப்டேட்டும் வெளியிடாமல் இருந்து வந்தது பட குழு. இந்த நிலையில் தற்போது படக்குழு ட்ரைலர் குறித்து ஒரு நாளை அறிவித்துள்ளது ஆம் அடுத்த ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி வாரிசு படத்தின் டிரைலர் வெளியாக உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ட்ரெய்லர் வெளியாகி 11 நாட்களில் வாரிசு படம் வெளியாவதால் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள் ரசிகர்கள்.
மேலும் இந்த திரைப்படத்தில் விஜய்யுடன் இணைந்து சரத்குமார், ராஷ்மிகா மந்தனா, குஷ்பூ, ஷாம், உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இது ஒரு செண்டிமெண்ட் படமாக உருவாகியுள்ளதால் ரசிகர்கள் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கொடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
.@actorvijay Fan Made 🔥 pic.twitter.com/gC5dNuBAuw
— #VARISU (@VarisuFilm) December 27, 2022