ரஜினியுடன் கைகோர்க்கும் சிபி..! சூப்பர் ஸ்டார்க்கு கோடிகளை அள்ளிக்கொடுக்கும் லைகா நிறுவனம் எவ்வளவு தெரியுமா.?

rajini
rajini

தமிழ் சினிமா உலகில் நம்பர் 1 ஹீரோவாக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் ஆரம்ப காலகட்டத்தில் ஹீரோ, வில்லன், குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்தார் இருப்பினும் ஒரு கட்டத்தில் இவர் ஹீரோவாக நல்ல நல்ல படங்களை கொடுத்து வெற்றியை கண்டு நம்பர் ஒன் ஹீரோவாக மாறினார் அன்றிலிருந்து இன்று வரை அவரை யாருமே அசைக்க முடியவில்லை..

இப்பொழுது கூட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வருடத்திற்கு ஒரு படத்தை அழகான முறையில் கொடுத்து மக்கள் மற்றும் ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார் அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நெல்சன் உடன் முதல் முறையாக கைகோர்த்து தனது 169 வது திரைப்படமான ஜெயிலர் படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.

இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் சென்னையில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு தற்போது படம் எடுக்கப்பட்டு வருகிறது இந்த படத்தில் ரஜினியுடன் கைகோர்த்து ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, விநாயகன், யோகி பாபு, கன்னட சூப்பர் ஸ்டார் சிவ ராஜ்குமார் மற்றும் பல முக்கிய பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.

இந்த படத்தை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் டான் பட இயக்குனர் சிபி சக்கரவர்த்தியுடன் கைகோர்ப்பார் என ஊடகங்களில் தொடர்ந்து செய்திகள் வெளி வந்தன இப்படி இருக்கின்ற நிலையில் தற்போது ஒரு தகவல் கிடைத்துள்ளது அதாவது ரஜினியின் 170-வது திரைப்படத்தை சிபி சக்கரவர்த்தி தான் இயக்க உள்ளதாகவும் அந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் இருக்கிறது.

இதற்கான அறிவிப்பு ரஜினியின் பிறந்த நாளை முன்னிட்டு டிசம்பர் மாதத்தில் அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது மேலும் இந்த படத்திற்காக ரஜினிக்கு சுமார் 120 கோடி சம்பளம் வழங்கப்பட இருப்பதாகவும் ஒரு பேச்சி அடிபட்டு வருகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்…