தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் என 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துவிட்டு தற்பொழுது வயதான காரணத்தினால் சீரியல்களில் நடிக்க தொடங்கியிருப்பவர் தான் நடிகை சத்திய பிரியா. இவர் 50கும் மேற்பட்ட படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கும் நிலையில் 1975ஆம் ஆண்டு வெளிவந்த மஞ்சள் நிற முகமே என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார்.
அதன் பிறகு தீபம், சக்ராயுதம், மனிதரில் இத்தனை நிறங்களா, புதியபாதை உள்ளிட்ட பல படங்களில் ஹீரோயினாக நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார். மேலும் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அம்மா கேரக்டரிலும், வில்லி கேரக்டரிலும் நடிக்க துவங்கிய சத்திய பிரியா தற்பொழுது பெரிதாக பட வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தினால் சீரியல்களில் நடித்து வருகிறார்.
அந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியலான எதிர்நீச்சல் சீரியலில் தான் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படிப்பட்ட நிலையில் சமீப பேட்டி ஒன்றில் கலந்துக் கொண்ட சத்யபிரியா தன்னுடைய மகன் மற்றும் மருமகளையும் அறிமுகப்படுத்தி இருக்கிறார். அதாவது சத்யபிரியா தன்னுடைய சினிமாவிலும், சின்னத்திரையிலும் நடந்த பல அனுபவங்களை பகிர்ந்து கொண்டிருக்கும் நிலையில் பிறகு இவருடைய மருமகள் அமெரிக்காவை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.
அதன் பிறகு இவருடைய மகனும் மருமகளும் பேட்டியில் கலந்து கொண்டனர். அப்பொழுது சத்யபிரியாவின் மகன் தனக்கு எப்படி திருமணம் நடந்தது என்பது பற்றி சுவாரசியமான தகவலை பகிர்ந்து கொண்டார். அதாவது சத்யபிரியா மகன் பேசுகையில், நான் அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் மாகாணத்தில் வேலை செய்து கொண்டிருக்கும் பொழுது என்னுடைய மனைவி நியூ ஜெர்சியை சேர்ந்தவர். இப்படி இருக்கும் பொழுது ஒரு நாள் ரயில் பயணம் செய்து கொண்டிருக்கும் பொழுது எனக்கு அதிகம் பசி எடுத்தது அப்பொழுது என்னுடைய மனைவி ஒரு இந்திய சமோசாவை கையில் வைத்திருந்தார்.
அந்த நேரம் நான் அவரிடம் சென்று இந்த சமோசாவை தயவு செய்து கொடுத்து விடுங்கள் நான் உங்களுக்கு கேண்டினில் வேறு உணவு வாங்கி கொடுக்கிறேன் என்று கூறினேன். அப்படிதான் நாங்கள் இருவரும் சந்தித்துக் கொண்டோம் எங்களின் இந்த ரயில் பயணம் 2 மணி நேரம் தொடர்ந்தது. அதில் பல விஷயங்களைப் பற்றி பகிர்ந்து கொண்டோம் சில நாட்கள் நண்பராக இருந்து வந்தோம் பிறகு ஒருவருக்கொருவர் பிடித்து விட்டது. எனவே தங்களுடைய காதலை ஆரம்பத்திலேயே என்னுடைய அம்மாவிடம் சொன்னேன் அவரும் ஒப்புக்கொண்டு எங்கள் திருமணத்தை நடத்தி வைத்தார் என சத்யபிரியா மகன் கூறினார்.