கொரோனா தொற்று நோய் சாதாரண நோய் அல்ல அது அடுத்த அடுத்த கட்டத்திற்கு முன்னேறி மக்களை பெருமளவில் தாக்கி கொண்டே வருகிறது. தற்பொழுது நாடு முழுவதும் இரண்டாம் கட்ட அலை பரவி ருத்ர தாண்டவம் ஆடி வருகிறது.
இதனால் இறப்போரின் எண்ணிக்கையும் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணமே இருக்கின்றன. இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு இன்று ஒரு நாள் மட்டும் தளர்வு கொடுத்து அடுத்த ஒரு வாரத்திற்கு மிக கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க ரெடியாக இருக்கிறது.
இதனால் மட்டுமே மக்களை காப்பாற்ற முடியும் என தெரியவருகிறது. இப்படி இருக்க தமிழ் சினிமாவில் காமெடியனாகவும் ஹீரோவாக வலம் வரும் கவுண்டமணி மக்களுக்கு சில வேண்டுகோளை விடுத்துள்ளார்.
அவர் கூறியது மக்கள் அவசியமின்றி வெளியே சுற்றக் கூடாது என உருக்கமாக தெரிவித்தார் மேலும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கோவிட் ஒரு சாதாரண நோய் அல்ல எனக்கு முன்னால் மக்கள் இறப்பதை நான் காண்கிறேன் தயவுசெய்து உள்ளேயே தங்கி இருங்கள் தடுப்பு ஊசி அல்லது ஏதேனும் அவசர நிலைக்கு மட்டுமே வெளியே வாருங்கள் என பதிவிட்டுள்ளார்.
கொரோனா தொற்று தற்போது தமிழகத்தில் தீவிரமடைந்துள்ளது அதை கருத்தில் கொண்டு மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர் அதற்கு ஏற்றார்போல் மக்கள் ஒத்துழைத்து வெளியே வராமல் வீட்டுக்குள் தங்கியிருக்குமாறு கவுண்டமணியை போல பல பிரபலங்களும் தற்போது விழிப்பு உணர்வை வெளிப்படுத்தி வருகின்றனர்.