சூட்டிங் ஸ்பாட்டில் ஹீரோ மற்றும் தயாரிப்பாளரையே ஆச்சர்யப்பட வைப்பவர் கவுண்டமணி தான்.. அந்த அளவிற்கு ராஜ வாழ்க்கை வாழ்ந்து உள்ளார்.!

gowndamani
gowndamani

சினிமா உலகில் ரொம்ப கஷ்டப்பட்டு ஒரு இடத்தைப் பிடித்து தனது திறமையைக் காட்டி முன்னணி நட்சத்திரமாக ஆனபிறகு பழசை மறந்து விட்டு சற்று கெத்து காட்டி வாழ்வார்கள் அப்படிப்பட்ட ஒருவரைப் பற்றி தான் நாம் பார்க்க போகிறோம். 90 காலகட்டங்களில் பல்வேறு டாப் நடிகர்கள் படங்களில் காமெடியனாக நடித்து பிரபலமடைந்தவர் கவுண்டமணி.

ஆரம்ப காலகட்டத்தில் கவுண்டமணி ஹீரோவாக, வில்லனாக நடித்திருந்தாலும் ஒரு காலகட்டத்தில் இவருக்கு காமெடி நன்றாகவே ஒர்க் அவுட் ஆனதால் டாப் நடிகர்களுடன் நடித்தார் குறிப்பாக ரஜினி, கமல், சத்யராஜ், பிரபு, கார்த்தி  ஆகியோர் படங்களில் கவுண்டமணி அதிகம் நடித்தார். அந்த நடிகர்களும் கவுண்டமணியை தனது படங்களில் நடிக்க வைத்து அசத்துவார்கள்.

இதனால் 90 காலகட்டங்களில் தவிர்க்க முடியாத ஒரு காமெடியனாக உருமாறினார். சினிமா உலகில் அதிக பட வாய்ப்பை கைப்பற்றினாலும் அப்போதைய காலகட்டத்தில் காமெடியன் என்றால் சற்று ஒரு மாதிரியாகத்தான் பார்ப்பார்கள் இதனால் கவுண்டமணி நடிகருக்கு நிகராக தான் இருக்க வேண்டும் என்பதற்காக ஹீரோக்கள் எந்த மாதிரியான உடை அணிகிறார்கள் அதே மாதிரியான உடை படங்களில் தானும் அணியவேண்டும்.

எனதயாரிப்பாளரும் கறாராக சொல்லி அதை போட்டு தான் நடிப்பாராம் மேலும் படத்தில் கவுண்டமணியை நடிக்கிறார் என்றால் அதற்கான சம்பளத்தை சரியாக கொடுத்து விட வேண்டுமாம் இல்லையென்றால் டப்பிங் பணிகள் பேசுவதற்கு வரமாட்டாராம் மொத்த காசையும் கொடுத்தால் தான் டப்பிங் பணிகளை பேசுவாராம் சினிமா உலகில் பிரபலமாக இருந்தாலும் ஒரு சில விஷயங்களில் ரொம்ப கறாராக இருந்துள்ளார்.

கவுண்டமணி ஒரு படத்தில் சூட்டிங்கிற்கு ஒவ்வொரு நாளும்  புதுப்புது கார்களில்  வந்து இறங்குவார்கள் ஹீரோக்கள் கூட அந்த மாதிரி பண்ண மாட்டார்கள் ஆனால் காமெடி நடிகர் கவுண்டமணி செம்ம மாஸ் காட்டுவாராம். இதுபற்றி கவுண்டமணியிடம் யாராவது கேட்டால் அவர் சொல்லும் முதல் வார்த்தை வாழ்க்கையை முடிந்த வரை அனுபவித்து வாழ்ந்து விட வேண்டும் என கூறுவார்.. அதே போலவேதான் ஆரம்பத்தில் இருந்து தற்போது வரையிலும் தனக்கு பிடித்த மாதிரி ஒரு ராஜ வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்.