லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விக்ரம் இந்த திரைப்படத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் தற்போது ரிலீசுக்காக காத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சமீபத்தில் நடைபெற்ற ஐசரி வேலன் சிலை திறப்பு விழா ஒன்று நடந்தது. அந்த நிகழ்ச்சியில் கமல்ஹாசன், கவுண்டமணி மற்றும் பல நடிகர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சி முடிவதற்கு முன்னதாகவே நடிகர் கமல்ஹாசன் அங்கிருந்து சென்றுவிட்டார்.
அதேபோல காமெடி நடிகரான கவுண்டமணியும் சிறிது நேரம் மேடையில் அமர்ந்து இருந்துவிட்டு அவரும் அந்த விழா முடிவதற்குள் அங்கிருந்து புறப்பட்டு விட்டார்.
இதற்க்கு முன்னதாகவே இசைஞானி இளையராஜா தயாரிப்பில் வெளியான சிங்காரவேலன் என்ற திரைப்படத்தில் கமலுடன் சேர்ந்து கவுண்டமணி நடித்திருந்தார். இந்த படத்தின் படப்பிடிப்பு தளத்தில் கவுண்டமணியிடம் ரசிகர் ஒருவர் இந்த படத்தில் செந்தில் அவர்கள் நடிக்கவில்லையே என்று கேட்டுள்ளார்.
அதற்கு கவுண்டமணி இந்த படத்தில் வெள்ளை செந்தில் ஒருவர் நடிக்கிறார் அவர் பெயர் கமல்ஹாசன் எனறு கூற அங்கிருந்த அனைவருமே கல கல என சிரிக்க அப்படியே சில நிமிடம் நீடித்தது. அப்போது அங்கு இருந்த கமல்ஹாசன் அவர்கள் இதை அவமானமாக கருதினார்.
இதனால் படப்பிடிப்பு தளத்தில் இருந்து யாரிடமும் எதுவும் பேசாமல் சென்று விட்டார். அப்போது உணவு இடைவேளை முடிந்து படப்பிடிப்பு தொடங்கியபோது அங்கு கமல்ஹாசனை காணவில்லை. இந்த நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளரான இளையராஜாவை தொடர்பு கொண்டு அங்கு நடந்ததை கூறியுள்ளார் நடிகர் கமல்ஹாசன்.
அதுமட்டுமல்லாமல் கமல்ஹாசன் அவர்கள் கவுண்டமணி என்னிடம் மன்னிப்பு கேட்டால் தான் படப்பிடிப்பிற்கு வருவேன் என பிடிவாதம் பிடித்து உள்ளார். உடனடியாக இளையராஜா அவர்கள் அவருடைய அண்ணன் அவர்களை அழைத்து கவுண்டமணியிடம் பேச வலியுறுத்தினார். பாஸ்கர் இதுகுறித்து கவுண்டமணியிடம் பேசியபோது அதற்கு என்னயா மன்னிப்பு தானே நான் கேட்கிறேன் என்று கவுண்டமணி தெரிவித்துள்ளார்.
இது நடந்த அடுத்த மறுநாள் கமல்ஹாசன் படப்பிடிப்பு தளத்திற்கு காரில் வந்து இறங்கிய உடனே அங்கு பலர் முன்னிலையில் கவுண்டமணி அவர்கள் உங்களை வெள்ளை செந்தில் என்று சொன்னதற்கு என்னை மன்னித்துவிடுங்கள். என்று கமல்ஹாசனிடம் மன்னிப்பு கேட்க, அதற்கு கமல்ஹாசன் விடுங்க விடுங்க என்று சொல்லி படப்பிடிப்பைத் தொடங்கியதாக சொல்லப்படுகிறது.