Coronavirus increase for government doctors: கொரோனா காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் இதனால் மக்களை சமூக விலகலை பின்பற்றுமாறு மத்திய மற்றும் மாநில அரசு அறிவுறுத்திய வண்ணமே உள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸை தடுப்பதற்காக மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார துறையினர், துப்புரவு பணியாளர்கள், காவல்துறையினர் என அனைவரும் அயராது உழைத்து வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பணியாற்றும் 9 மருத்துவர்களுக்கு கொரோனா தோற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. தகுந்த பாதுகாப்புடன் செயல்படும் அரசு மருத்துவர்கள் அடுத்தடுத்து கொரோனாவால் பாதிக்கப்படுவதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த ஒன்பது டாக்டர்களில் 6 டாக்டர்கள் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதனைத்தொடர்ந்து அரசு மருத்துவ கல்லூரியில் பட்ட மேற்படிப்பு டாக்டர்கள் 3 பேர் கொரோனா செய்யப்பட்டுள்ளது. ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் இதய பிரிவில் பணியாற்றிய இரண்டு டாக்டர்களுககு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் கஸ்தூரிபா காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு பிரசவம் பார்த்த மருத்துவ ஊழியருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அறிந்த மக்கள் மருத்துவர்களுக்கே இந்த நிலைமையா என அதிர்ச்சியில் உள்ளார்கள்.