உலக நாடுகள் முழுவதும் கொரனோ தொற்று வேகமாக பரவி வந்தது, அதே போல் இந்தியாவிலும் மிக வேகமாக பரவி வருகிறது, இந்தியாவில் குறிப்பிட்ட மாநிலத்தில் கொரோனா தோற்று விஸ்வரூபம் எடுத்துள்ளது அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் சென்னையில்தான் அதிக கொரோனா இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
கொரோனா தோற்று நல்லவர்கள் கெட்டவர்கள் என யாரையும் பார்ப்பதில்லை, தற்பொழுது திரை பிரபலங்களையும் கொரனோ தோற்று விட்டுவைப்பதில்லை, சில இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், இசையமைப்பாளர்கள், நடிகர்கள் என ஒருசிலருக்கு கொரோனா தோற்று ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
அவர்களில் அதிக பாதிப்பு இல்லாத சிலர் தங்களை வீட்டிலேயே தனிமைப் படுத்திக் கொண்டார்கள் அதுமட்டுமில்லாமல் சிகிச்சை பெற்றும் வருகிறார்கள், அதிலும் சிலர் தனியார் மருத்துவமனையில் ரகசியமாக சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது நேற்று மரணம் அடைந்த மூத்த பின்னணி பாடகர் ஏ எல் ராகவன் கொரோனா தோற்றால் மாரடைப்பு காரணமாக இறந்ததாக தகவல் கிடைத்துள்ளது.
அவருடைய மனைவி நடிகை எம்என் ராஜத்திற்கும் கொரோனா தோற்று ஏற்பட்டுள்ளதால் அவரும் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார், அதுமட்டுமில்லாமல் ஏற்கனவே சீனியர் நடிகர்களான ரஜினிகாந்த் கமல்ஹாசன் ஆகியோர்கள அவர்களது வீட்டிலேயே இருக்கிறார்கள் அவர்களைப் போலவே அஜித், விஜய் இருவரும் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் இருக்கிறார்கள் அது மட்டுமில்லாமல் அவர்களின் படங்கள் படப்பிடிப்புகளை கூட தோற்று குறைந்த பிறகுதான் படப்பிடிப்பு வைத்துக்கொள்ள வேண்டும் என கறாராக சொல்லி விட்டார்களாம்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சிலருக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் உதவி செய்து வருகிறார்கள் இந்த ஊரடங்கு முடிந்தபின் டிவி தொடர் படப்பிடிப்புகள் சினிமா படப்பிடிப்புகளை நடத்த கூடாது என சிலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள் முதலில் உயிரை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் பிறகு தான் தொழிலை பார்க்க முடியும் என்பதே பலரின் கருத்தாக இருக்கிறது. எது எப்படியோ இந்த கொரோனா தோற்று முடிந்தால்தான் பலருக்கும் நிம்மதி.