சினிமாவில் பல்வேறு சிறப்பு கூறிய படங்களில் துணை கதாபாத்திரங்களிலும் முக்கிய ரோல்களிலும் நடிப்பு சிறப்பாக வலம் வருபவர் காளி வெங்கட் இவர் இதுவரையிலும் குறைந்தது 40 படங்களுக்கு மேலாக நடித்து வருகிறார்.
மேலும் காமெடி ரோல்களில் பின்னி பெடல் எடுப்பது இவருக்கு கைவந்த கலை என்பது குறிப்பிடத்தக்கது. சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் விஜய், சூர்யா, தனுஷ் போன்றவர்கின் படங்களில் அவருடன் வலம் வருவதோடு மட்டுமல்லாமல் கதைக்கு முக்கியத்துவம் ரோலில் பின்னிப் பெடல் எடுத்தார்.
இதனால் இவருக்கு தமிழ் சினிமாவில் நல்ல இடம் கிடைத்துள்ளது. பட வாய்ப்புகளும் குவிந்த வண்ணம் இருக்கின்றன. இந்த நிலையில் அவர் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டு பலருக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார் அவர் கூறியது. அந்த வீடியோவில் அவர் குறிப்பிட்டுள்ளது நானும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மூச்சுத்திணறல் இருமல் என அனைத்து அறிகுறிகளும் இருந்தது. அது சிக்கலான நிலையில் இருந்து மீண்டதாக கூறினார்.
மேலும் 21 நாட்கள் அறிகுறிகள் இருந்தன இருமல் மூச்சுத்திணறல் எல்லாமே இருந்தது கொஞ்சம் சிக்கலான நிலையில் இருந்தேன் அப்பொழுது அட்மிட் ஆக சொன்னாங்க ஆனா நான் மருத்துவமனைக்கு போனேன் அங்கு இடமில்லை போனது இதுபோன மாசம் தான் நடந்தது எனக்கு கூடவே இருந்து டாக்டர் முருகேஷ் பாபு தான் உதவி செய்தார்.
கொரோனா இல்லாமா பாத்துக்கடா தான் ரொம்ப முக்கியம்அலட்சியமாக இருக்காதீர்கள் மருத்துவர் சொல்றதைக் கேளுங்க இவ்வாறு நடிகர் காளி வெங்கட் தனது வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.
முதலில் இந்த வீடியோவை வெளியிட வேண்டாம் எனத் தான் யோசித்து இருந்தேன் ஆனால் ரமேஷ் திலக் சொன்னதால் இதை பகிர்கிறேன் என குறிப்பிட்டார்.