கொரோனாவுக்காக அஜித் பட பாடல்லாசிரியர் அருண் பாரதி எழுதிய பாடல்.! கொரோனா நோயின் உயிரை எடுப்பாய் நீ

Viswasam-Status tamil360newz
Viswasam-Status tamil360newz

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருப்பவர் நடிகர் அஜித் இவர் சிறுத்தை சிவா இயக்கத்தில் விஸ்வாசம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்தப் படத்தில் ஒவ்வொரு பாடலும் பட்டி தொட்டியெங்கும் பிரபலம் அடைந்தது, இந்த திரைப்படத்தில் டங்கா டங்கா டங்கா என்ற பாடலை எழுதியவர் பாடலாசிரியர் அருண்பாரதி.

இவர் இதற்குமுன் சண்டக்கோழி 2, கொலைகாரன், அண்ணாதுரை, காளி, திமிரு புடிச்சவன், தில்லுக்கு துட்டு 2, வால்டர் ஆகிய திரைப்படங்களுக்கு பாடலை எழுதியுள்ளார், நாடு முழுவதும் கொரோனா நோய் வேகமாக பரவி வருவதால் தமிழ்நாட்டில் 144 தடை விதிக்கப்பட்டு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இதனால் மக்கள் வீட்டிலேயே இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது அதனால் பல சினிமா பிரபலங்களும் கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக வீடியோவை வெளியிட்டு வருகிறார்கள். இந்த நிலையில் பாடலாசிரியர் அருண்பாரதி கொரோனா குறித்து விழிப்புணர்வு பாடலை எழுதி வெளியிட்டுள்ளார்.

அதற்கு வால்டர் திரைப்படத்தின் இசையமைப்பாளர் இசையமைத்து பாடியுள்ளார் அந்த பாடல் வரிகள் இணையதளத்தில் வைரலாகி வருகின்றன.

அந்த பாடல் வரிகள் இதோ….

எத்தனை போர்களை- தாண்டினோம், எத்தனை வலிகளைத் தாங்கினோம், கொரனோ என்னும் தொற்றுக்கா – நாம் தோற்றுப் போகப் போகிறோம் ? அனைவரும் ஒன்றாய் இணைந்துதான், வெற்றிகள் ஆயிரம் தேடினோம் இனி தனித்தனியாகப், பிரிந்துதான், வெற்றியைப் பார்க்க போகிறோம், குழிகளைத் தோண்டிப் புதைத்தாலும் – அதில் செடியாய் நாங்களும் முளைப்போமே, வைரஸ் என்கிற ஆயுதத்தை – எங்கள் ஒற்றுமை கொண்டு உடைப்போமே சரித்திரத்தில் நாம்…. சரித்திரத்தில் நாம்….

சரணம் – 1

வெள்ளை உடையில் இராணுவ வீரன், நீயும் பார்த்ததுண்டா. கொள்ளை நோயில் மருத்துவன் தானே இராணுவ வீரனடா லத்திகள் இன்றி புத்திகள் சொல்லும் போலீஸ் பார்த்ததுண்டா போலீஸ் எல்லாம் போலிகள் இல்லை காவல் சாமியடா அழுக்கை எல்லாம் அடித்து விரட்டும் துப்புரவுத் தொழிலாளி உலகில் கடவுள் இருந்தால் அவன்தான் அவனுக்கும் முதலாளி தனியாய் இருந்து தடுப்பவன் எவனோ அவனே அறிவாளி உயிரை எடுக்கும் கொரோனா நோயின் உயிரை எடுப்பாய் நீ சரித்திரத்தில் நாம்…. சரித்திரத்தில் நாம்….