உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் இப்பொழுது தமிழகத்திலும்.! மக்கள் யாரும் பதற்றம் அடையவேண்டாம் விஜயபாஸ்கர்.

corona
corona

தமிழக மக்கள் பலரும் வேலைவாய்ப்புக்காக வெளிநாடு சென்று சம்பாதிக்கிறார்கள், அப்படி வெளிநாடு சென்று சம்பாதித்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் தாக்கியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஓமன் நாட்டில் இருந்து திரும்பிய தமிழகத்தை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் தாக்கியுள்ளது மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளார்கள் அவரை தற்போது மருத்துவ கண்காணிப்பிலேயே வைக்கப்பட்டுள்ளார். மேலும் 2 பேர் ஸ்டார்க்கை சேர்ந்தவர் என்றும் அவர் ஈரான் நாட்டிலிருந்து திரும்பியவர் என மத்திய சுகாதாரத் துறை சிறப்பு செயலாளர் சஞ்சீவ் குமார் அறிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பாதித்த நபர் காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர், இவர் ஓமன் நாட்டிலிருந்து வந்து இரண்டு நாட்களாக சளி மற்றும் காய்ச்சலால் அவதிப்பட்டு உள்ளார், பின்பு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார், இவருக்கு கொரோனா வைரஸ் இருக்கும் என அந்த மருத்துவமனையில் இருந்து  ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

தற்பொழுது அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது, இது குறித்து தமிழக மக்கள் கொரோனா வைரஸ் குறித்து பதற்றமடைய வேண்டாம் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் இதுவரை 34 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது அவர்களின் விவரம் கீழே.

ராஜஸ்தான் 17 நபர்கள் அதில் இத்தாலியர்கள் 16 மற்றும் ஓட்டுநர் ஒருவர், உத்தர பிரதேசம் ஏழு நபர்கள் அதில் ஆந்திராவை சேர்ந்தவர்கள் 6 பேர் காசியாபாத் ஒரு நபர். கேரளாவில் 3 பேரும், டெல்லியில் இரண்டு பேரும், தெலுங்கானாவில் சேர்ந்தவர் ஒருவரும் தமிழகத்தில் ஒருவரும், லடாக் இரண்டு பேரும் பாதிக்கப்பட்டுள்ளார்கள் மேலும் அரியானாவில் இத்தாலியில் இருந்து திரும்பிய Pay Tm ஊழியருக்கு கொரோனா வைரஸ் தாக்கியுள்ளது.

இந்தியாவிற்கு சுற்றுலா வந்த 16 பேர் கொண்ட இத்தாலியர்கள் குறைந்தபட்சமாக 215 பேர் உடன் தொடர்பில் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது, இதுவரை உலகம் முழுவதும் காரணம் வைரஸ் தாக்கியதில் சுமார் 95 ஆயிரம் பேர் பாதிக்கப் பட்டுள்ளார்கள்.