கொரோனா வைரஸை எதிர்க்கும் மருந்து கண்டுபிடிப்பு.! அதிகாரபூர்வமாக கூறிய இஸ்ரேல் விஞ்ஞானிகள்

corona
corona

கொரோனா வைரசை எதிர்க்கும் ஆண்டிபாடி எனப்படும் பிறபொருள் எதிரியை இஸ்ரோ விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்கள். இந்த தகவல் மக்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது, இதற்கு மருந்து கண்டுபிடிக்க பல நாடுகள் தீவிரமாக இறங்கியுள்ளார், இந்த கொரோனா வைரஸை கட்டுப்படுத்த தனிமைப்படுத்துவது முதல் படி என உலகத்திலுளள பல நாடுகளில் 144 தடை விதிக்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வந்தார்கள்.

இந்த நிலையில் இஸ்ரேல் விஞ்ஞானி மருந்து கண்டு கண்டுபிடித்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது, நமது உடலுக்கு ஒவ்வாத வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்கள் போன்றவை உடலுக்குள் நுழையும்போது அவற்றை எதிர்க்க பிறபொருள் எதிரிகள் ஆன்டிபாடிகள் உருவாகின்றன அவ்வாறு வைரஸை எதிர்க்கும் ஆண்டிபாடி இஸ்ரேலில் உள்ள உயிரியல் ஆய்வக விஞ்ஞானிகள் கண்டுபிடித்து தனிமை படுத்தியுள்ளார்கள்.

கொரோனா வைரசை எதிர்க்க இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஆன்டிபாடிகள், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட செல்களிலிருந்து உருவாக்கப்பட்டவை ஆனால் மோனோகுளோனல் எனப்படும் ஒரே செல்லில் இருந்து ஆன்டிபாடி தனிமைப்படுத்தும் முயற்சியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் இறங்கினார்கள் அதில் தற்போது வெற்றி பெற்றுள்ளார்கள்.

இந்த கண்டுபிடிப்புக்கு காப்புரிமை பெற்ற பின்பு ஒரு சர்வதேச உற்பத்தியாளர் மூலம் அதிக அளவில் தயாரிக்கப்படும் என இஸ்ரேல் அறிவித்துள்ளது.