நடிகர் பிரித்திவிராஜ் தனக்கு எடுக்கப்பட்ட கொரோனா டெஸ்ட் முடிவை தன்னுடைய சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
நடிகர் பிரித்திவிராஜ் ஆடுஜீவிதம் என்ற நாவலை மையப்படுத்தி பிளெஸ்ஸி இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் சூட்டிங் ஜோர்டான் நாட்டில் வாடி ரம் பாலைவனப் பகுதியில் நடைபெற்றது. இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுது ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்ததால் போக்குவரத்து தடைபட்டது.
இதனால் ஜோர்டான் நாட்டில் படக்குழுவினர் சிக்கி தவித்தார்கள். இதனால் நாலாவது ஊரடங்கு அமலில் இருக்கும் பொழுது சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் பாரத் மிஷன் திட்டத்தின் கீழ் வெளிநாட்டில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை தாய்நாடு அழைத்து வரபட்டார்கள்.
படக்குழுவினர் பிரித்திவிராஜ் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் அந்த திரைப்படத்தில் நடித்த நடிகர் நடிகைகள் என அனைவரும் 22ஆம் தேதி தாயகம் திரும்பினார்கள், கொச்சி வந்தடைந்த படக்குழுவினர் அனைவரையும் பரிசோதனை செய்து குறிப்பிட்ட நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டு பிறகு வீடு திரும்புவார் என கூறப்பட்டது.
இந்த நிலையில் கொச்சியில் உள்ள ஒரு விடுதியில் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்ட நடிகர் பிரித்திவிராஜ்க்கு கொரோனா பரிசோதனை நடைபெற்றது அந்த பரிசோதனை முடிவில் நெகட்டிவ் என வந்திருப்பதை தன்னுடைய சமூக வலைத்தளத்தில் அவர் அறிவித்துள்ளார்.
இருந்தாலும் இன்னும் இரண்டு வாரங்களுக்கு தனிமைப் படுத்துதல் நடைமுறை முடிந்த பிறகு வீடு திரும்புவேன் என அவரே கூறியுள்ளார்.
இதுபோல் ஒவ்வொருவரும் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டால் இந்த கொரோனாவை தவிர்க்கலாம்.