மாவட்ட வாரியாக தமிழகத்தில் எத்தனை பேருக்கு கொரோனோ பரிசோதனை தெரியுமா.? இதோ முழு லிஸ்ட்

corona

உலகையே நடுநடுங்க வைக்கும் கொரோனா தற்போது இந்தியாவிலும் மிக வேகமாக பரவி வருகிறது, அந்தவகையில் மத்திய அரசின் தகவலின்படி இதுவரை கொரோனா வைரஸ் 142 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், இந்தநிலையில் அந்தந்த மாநிலங்கள் ஒரு தகவலை வெளியிட்டுள்ளார்கள்.

தேசிய பேரிடராக கொரோனா பாதிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது நாடு முழுவதும் அதனால் பள்ளிகள், கல்லூரிகள், சினிமா தியேட்டர்கள், வணிக வளாகங்கள் என பொதுமக்கள் கூடும் அனைத்து இடங்களும் மூடப்பட்டுள்ளன, அதுமட்டுமில்லாமல் மக்களும் ஒன்று கூட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு மூன்று பேர் உயிரிழந்த நிலையில் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஒருவரும் இன்று உயிரிழந்துள்ளார், அதுமட்டுமில்லாமல் ஈரானில் இந்தியர் ஒருவர் உயிரிழந்ததாக வெளியுறவுத்துறை இன்று அறிவித்துள்ளது. இப்படியிருக்க கொரோனாவால் தமிழகத்தில் இதுவரை மூன்று பேர் பாதிக்கப் பட்டுள்ளார்கள் இதில் காஞ்சிபுரத்தை சேர்ந்த ஒருவர் குணமாகி வீட்டுக்கு சென்றுள்ளார்,

மேலும் டெல்லியைச் சேர்ந்த ஒரு இளைஞருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது அதுமட்டுமில்லாமல் என்று அயர்லாந்தில் இருந்து சென்னைக்கு வந்த இருபத்தி ஒரு இளைஞருக்கு கொரோனோ பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழக சுகாதாரத்துறை சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி கடந்த பிப்ரவரி மாதம் முதல் 20ஆம் தேதி வரை 3,481 பேருக்கு கொரோனா வைரஸ் சோதனை செய்யப்பட்டுள்ளது இதில் மாவட்டம் வாரியாக எத்தனை பேருக்கு செய்யப்பட்டுள்ளது என்பதை விரிவாக கொடுத்துள்ளார்கள்.

தமிழ அரசு மிகவும் தீவிரமாக இந்த கொரோனோ வைரஸ் தமிழ்நாட்டை நெருங்கவிடாமல் பல்வேறு முயற்சிகலை செய்து வருகிறது.

corona
corona