vijay help : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய் இவர் தற்பொழுது மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார் விஜய் சேதுபதி ஆண்ட்ரியா கௌரி கிஷன், ரம்யா, சாந்தனு ஆகியோர்கள் நடித்துள்ளார்கள்.
தற்பொழுது கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதால் நாடு முழுவதும் 144 தடை விதிக்கப்பட்டு மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டு வருகிறது. ஊரடங்கு உத்தரவால் படப்பிடிப்பு எதுவும் நடைபெறாமல் பிரபலங்களும் வீட்டிலேயே இருக்கிறார்கள்.
ஊரடங்கு உத்தரவால் பல மக்களுக்கு தங்களுடைய இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது, அதேபோல் சினிமா தொழிலாளர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார் வேலை இழந்து தவிக்கும் சினிமா தொழிலாளர்களுக்கு பெப்சி அமைப்பினர் நிதி திரட்டி வருகிறது, இதற்கு திரை பிரபலங்கள் பலரும் நிதியுதவி செய்து வருகிறார்கள் அந்த வகையில் பெப்சிக்கு நடிகர் விஜய் 25 லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார், அதேபோல் தமிழ்நாடு முதல்வர் நிவாரண நிதிக்கு 50 லட்சமும் பிரதமர் நிவாரண நிதிக்கு 25 லட்சமும் வழங்குவதாக அறிவித்துள்ளார்.
அதுமட்டுமில்லாமல் கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு 10 லட்சமும் கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, புதுச்சேரி, ஆகிய மாநிலங்களின் முதல்வர் நிவாரண நிதிக்கு ஐந்து லட்சமும் கொடுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது ஆக மொத்தம் 1.30 கோடி கொரோனா தடுப்பு பணிக்கு வழங்குவதாக விஜய் அறிவித்துள்ளார்.