கொரோனா அறிகுறியுடன் வந்த கர்ப்பிணி பெண்ணை பலாத்காரம் செய்த மருத்துவர் தொடர்பான புகைப்படம் மற்றும் அதன் உண்மை நிலவரம் தற்போது தெரியவந்துள்ள அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் கரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது அந்த வகையில் இந்தியாவிலும் மிக வேகமாக பரவி வருகிறது, அதனால் இதனை தடுக்கும் விதமாக 144 தடை விதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் கடைபிடித்து வருகிறார்கள், இந்த கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே இருக்கும் நிலையில் ஒரு புறம் மாற்றத்திற்கு புறம்பான சம்பவங்கள் அதிகமாகிக்கொண்டே வருகின்றன,.
அந்தவகையில் சில நாட்களுக்கு முன்பு இளம் பெண் ஒருவர் மருத்துவமனையில் இருப்பது போன்ற புகைப்படம் இணையதளத்தில் வைரலானது, அதில் குறிப்பிட்டுள்ளது என்னவென்றால் கொரோனா அறிகுறியுடன் தனிமைப்படுத்தப்பட்ட பெண்ணை மருத்துவர் பலாத்காரம் செய்து விட்டார் என்ற தகவல் மிக வேகமாக பரவி வந்தன.
அதன்பின் அந்த மருத்துவமனையில் இருந்த கர்ப்பிணிப் பெண் டிஸ்சார்ஜ் ஆன பின்பு உயிரிழந்து விட்டார் எனவும் கூறப்பட்டது, இந்தநிலையில் அந்தப் புகைப்படத்தின் உண்மைதன்மை தற்போது வெட்ட வெளிச்சத்திற்கு வந்துள்ளது, அந்த புகைப்படத்தில் இருக்கும் பெண் 16 வயதுடைய சிறுமி ஆகும்.
அவர் கடந்த 2017 உடல்நிலை பாதிக்கப்பட்டு உத்தரப்பிரதேசத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார் இந்த நிலையில் சிறுமியை பாதுகாத்து வந்த பணிபுரியும் ஊழியர் ஒருவர் அந்த சிறுமியை உடை மாற்ற சொல்லி பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார் என்பது தற்போது உறுதியாகியுள்ளது.
அதேபோல் இதே சம்பவம் போல் பீகார் மாநிலத்தில் 25 வயது பெண் ஒருவர் கடந்த மார்ச் மாதம் 25ஆம் தேதி கருச்சிதைவு ஏற்பட்ட நிலையில் அதிக ரத்தப்போக்கு ஏற்ப்பட்டு உடனே மருத்துவமனைக்கு வந்துள்ளார், அங்கு அவருக்கு கொரோனா அறிகுறி இருப்பது தெரியவந்துள்ளது இதனையடுத்து அந்த பெண்ணை தனிமை படுத்தினார்கள்.
பின்பு தனிமைப்படுத்தப்பட்ட பெண்ணை மருத்துவமனை ஊழியர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார், கொரோனா சிகிச்சை முடிவடைந்த பின் வீடு திரும்பிய பெண்ணிற்கு ஏற்பட்ட அதிக ரத்தப்போக்கு காரணமாக கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி மரணம் அடைந்துள்ளார் இது அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அவர் மரணமடைந்ததை அடுத்து காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தற்போது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள் இந்த சம்பவம் மக்களிடையே மிகுந்த அதிர்ச்சியை கொடுத்துள்ளது.