corona : கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தினமும் வழங்கப்படும் உணவு குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது, அதில் அவர்கள் கூறியுள்ளதாவது ரம்ஜான் மாதம் கடைபிடிக்கபடுவதால் இரண்டு விதமான உணவுகளை பின்பற்றுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி கொரோனா வைரஸ் பாதிப்பால் தனிமைப்படுத்தப்பட்ட நோயாளிகளுக்கு காலை 7 மணிக்கு பிஸ்கட் மற்றும் காபி வழங்கப்படுகிறது, அதனைத் தொடர்ந்து காலை எட்டு முப்பது மணிக்கு இட்லி சாம்பார் வழங்கப்படுகிறது, அதேபோல் 10 மணிக்கு கபசுர குடிநீர் மேலும் 11 மணிக்கு வேகவைத்த சுண்டல், அதனைத் தொடர்ந்து வேர்கடலை மற்றும் எலுமிச்சைசாறு வழங்கப்படும் எனவும் மதியம் ஒரு மணிக்கு சாம்பார், ரசம், முட்டையுடன் சாதம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்கள்.
மேலும் மாலை 4 மணிக்கு பிஸ்கட் மற்றும் காபி கொடுக்கப்பட்டு ஏழு முப்பது மணிக்கு வாழைப்பழம் கொடுக்கப்படும் அதைத் தொடர்ந்து இரவு 8 மணிக்கு சாம்பார் ரசம் பொரியல் உடன் சாதம் கொடுக்கப்படும், பின்பு இரவு 10 மணிக்கு பாலுடன் பூண்டு வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்கள்.
அதேபோல ரம்ஜான் நோன்பு இருப்பவர்களுக்கு காலை நாலு மணிக்கு ரொட்டி பிஸ்கட் வழங்கப்பட்டு நாலரை மணிக்கு கபசுர குடிநீர் வழங்கப்படும், இதனைத்தொடர்ந்து பின்பு 7 மணிக்கு வாழைப்பழம் கொடுக்கப்பட்டு இரவு ஒன்பது முப்பது மணிக்கு சாப்பாடும் பத்துமணிக்கு பாலுடன் பூண்டு வழங்கப்படுகிறது.
அதுமட்டுமில்லாமல் ஒரு நாளைக்கு ஒரு வேளை 60 மில்லி பெரியவர்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்படும், அதேபோல் சிறுவர்களுக்கு 30 மில்லி வழங்கப்படும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.