உலகம் முழுவதும் கொரோனா தாக்கம் அதிகரித்து பலகோடி மக்கள் நாள்தோறும் இறந்து வருவதை கண்முன் பார்த்து வருகிறோம். அது மட்டுமல்லாமல் இந்தியாவில் தற்போது கொரோனாவின் இரண்டு, மூன்றாவது அலை மிகவும் வேகமாக பரவி வருகிறது. எனவே தற்போது மீண்டும் பல கட்டுப்பாடுகளுடன் சில தளர்வுகள் உடன் உத்தரவுகள் போடப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் கொரோனாவால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு மருத்துவமனையில் படுக்கை அறை இல்லாமல் மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள். இதைத்தொடர்ந்து மருத்துவமனை அதிகரித்தல், ஆக்சிஜன் இறக்குமதி, மருத்துவ உபகரணங்கள் போன்றவை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் திரைப் பிரபலங்கள், அரசியல்வாதிகள்,தொழிலதிபர்கள் என்று பலரும் முதலமைச்சர் மு க ஸ்டாலினிடம் கொரோனாவிற்காக நிவாரண உதவி செய்து வருகிறார்கள்.
அந்த வகையில் எந்தெந்த திரைப்பிரபலங்கள் எவ்வளவு பணம் கொடுத்து உள்ளார்கள் என்ற லிஸ்டை தற்போது பார்ப்போம்.
சூர்யா: சினிமாவில் முன்னணி நடிகர்களான சூர்யா மற்றும் அவரின் தம்பி கார்த்திக் இவர்களின் அப்பா சிவகுமார் ஆகியோர்கள் இணைந்து முதலமைச்சர் மு க ஸ்டாலினிடம் ரூபாய் ஒரு கோடி நிதி உதவி வழங்கி உள்ளார்கள்.
ரஜினி மகள்: நடிகர் ரஜினியின் மகளான சௌந்தர்யா தனது கணவருடன் இணைந்து இரு தினங்களுக்கு முன்பு முதலமைச்சர் மு க ஸ்டாலின் நேரில் சந்தித்து ஒரு கோடி ரூபாய் நிதி உதவி வழங்கி உள்ளார்.
அஜித் : தல அஜித் முதலில் 2.5 கோடி நிதி உதவி வழங்குவதாக கூறப்பட்டது அதன்பிறகு தப்பாக கூறி விட்டோம் என்று மறுபடியும் 25 லட்சம் ரூபாய் கொடுத்து உள்ளதாக கூறி இருந்தார்கள். இதனை தொடர்ந்து படப்பிடிப்பு இல்லாமல் தவித்து வரும் பலருக்கு 10 லட்ச ரூபாய் வழங்கி உள்ளார்.
ஏ ஆர் முருகதாஸ் : பிரபல இயக்குனரான இவர் நன்கொடையாக ரூபாய் 25 லட்சம் வழங்கியுள்ளார். அதோடு கொரோனா பரவலை தடுப்பதற்காக பணிகளிலும் இறங்கி உள்ளார் என்று கூறி வருகிறார்கள்.
அமுதன், சங்கர், வெற்றிமாறன்: சி எஸ் அமுதன் தன்னால் முடிந்த ரூபாய் 50 ஆயிரத்தையும்,இயக்குனர் சங்கர் 10 லட்சம் ரூபாய், வெற்றிமாறன் 10 லட்ச ரூபாய் நிதி உதவியாக வழங்கி உள்ளார்கள்.
சிவகார்த்திகேயன் : இவரும் கொரோனாவிற்கு நிதி உதவியாக ரூபாய் 25 லட்சம் முதலமைச்சரை நேரில் சந்தித்து வழங்கி உள்ளார்.
ஜெயம் ரவி : இவரும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் நேரில் சந்தித்து ரூபாய் 10 லட்சம் நன்கொடையாக வழங்கியுள்ளார். இவ்வாறு நாள்தோறும் மக்கள் கொத்துக்கொத்தாக மடிந்து வருவதால் அனைவரும் நிதி உதவி வழங்குமாறு கேட்டு வருகிறார்கள்.