சமீபத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகிக் கொண்டிருந்த கொரோனா குமார் என்ற திரைப்படம் பாதியிலேயே நின்று விட்டதாக சமூக வலைதளப் பக்கத்தில் செய்திகள் வெளியானது மட்டுமில்லாமல் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளார்கள். இந்நிலையில் இது குறித்து பட குழுவினர்கள் ஒரு விளக்கத்தை வெளியிட்டுள்ளார்கள்.
நடிகர் சிம்புவின் மாநாடு திரைப்படத்தில் நடித்ததன் பிறகாக சிம்புவின் மார்க்கெட் மிகுந்தது மட்டுமில்லாமல் தற்போது அடுத்தடுத்த திரைப்படங்களில் நடிக்க சிம்பு பிஸியாக நடித்து வருகிறார் அந்த வகையில் தற்போது நடிகர் சிம்பு வெந்து தணிந்தது காடு, பத்து தலை, மகா ஆகிய திரைப்படங்கள் படப்பிடிப்பில் உள்ளது.
அதுமட்டுமில்லாமல் கொரோனா குமார் திரைப்படமும் சிம்புவின் நடிப்பில் உருவாகிக் கொண்டிருக்கிற நிலையில் நடிகர் சிம்பு வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படத்தில் கௌதம் மேனன் இயக்கத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தின் பின்னணி பணிகள் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சிம்புவுக்கு ஜோடியாக இளம் நடிகை சித்திதான் நடித்துள்ளார்.
மேலும் இந்த திரைப்படத்தின் சிறப்பு அம்சம் என்னவென்றால் ராதிகா சரத்குமார் ஆகியோர் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தின் இசை மிகப் பிரம்மாண்டமாக இருக்க வேண்டும் என்ற காரணத்தினால் ஏ ஆர் ரகுமான் புக் செய்துள்ளார்கள்.
மேலும் இந்த திரைப்படத்தை தொடர்ந்து பத்து தலை திரைப்படம் ஷூட்டிங் மிக விறுவிறுப்பாக சென்று கொண்டிருப்பது மட்டும் இல்லாமல் இதில் நடிகர் சிம்பு பெரிய கேங்ஸ்டராக நடித்து வருகிறார் மேலும் இந்த திரைப்படத்திலும் ஏ ஆர் ரகுமான் அவர்கள் தான் இசையமைத்து வருகிறாராம்.
இப்படி பிசியாக பல திரைப்படங்களில் நடித்து வரும் சிம்பு கொரோனா குமார் திரைப்படம் ட்ராப் ஆகிவிட்டதாக ஒரு செய்தி சமூக வலைதளப் பக்கத்தில் வெளியாகியுள்ளது. அந்த வகையில் இந்த திரைப்படத்தில் நடிகர் சிம்புவுக்கு நடிக்க சுத்தமாக உடன்பாடு கிடையாது ஆகையால் தயாரிப்பாளர் ஐசரி கணேசன் இந்தத் திரைப்படத்தை ட்ராப் செய்து விடலாம் என முடிவு செய்துள்ளார்களாம்.
ஆனால் இது குறித்து தயாரிப்பு நிறுவனம் இது முழுக்க முழுக்க பொய்யான தகவல் இந்த திரைப்படம் திட்டமிட்டபடி நடக்கும் என தெரிவித்துள்ளார்கள் அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படம் முழுக்க முழுக்க காமெடி கதையம்சத்துடன் தயாரிக்கும் படம் திரைப்படம் ஆகும் என இயக்குனர் கோகுல் கூறியுள்ளார்.