சென்னையில் உள்ள பூந்தமல்லி அருகே நடைபெற்று வந்த மலையாள பிக்பாஸ் வீட்டில் கொரோனா பரிசோதனை நடைபெற்றது அப்போது அங்கு ஆறு பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது அதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியை கமலஹாசன் தொகுத்து வழங்கி வந்தார் இந்த நிகழ்ச்சி ரசிகர்களிடம் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பப்பட்டு வந்தது இந்த நிலையில் அதே போல் தெலுங்கு, மலையாளத்திலும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒலிபரப்பப்பட்டு வந்தது இந்த நிகழ்ச்சி பூந்தமல்லியை அடுத்து செம்பரம்பாக்கத்தில் உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் மிகப்பெரிய செட் அமைக்கப்பட்டு தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற்று வந்தது.
மலையாளத்தில் நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை மோகன்லால் தான் தொகுத்து வழங்கி வந்தார் தற்பொழுது கொரோனா காலகட்டம் என்பதால் அங்கு பணியாற்றும் தொழிலாளர்கள் மற்றும் நடிகர் நடிகைகள் என அனைவருக்கும் பரிசோதனையை செய்துவந்தார்கள் இந்த நிலையில் வாரத்தில் புதன் கிழமை அன்று அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
பணியாளர்களுக்கு செய்யப்பட்ட பரிசோதனையில் இன்றைக்கு ஆறு பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது இதனால் படப்பிடிப்பில் பலரும் பீதி அடைந்துள்ளார்கள் இதனை அடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தி உள்ளார்கள்.
இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள நடிகர் மற்றும் நடிகைகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படாத அளவிற்கு வீட்டிலிருந்தபடியே வெளியேற்றப்பட்ட தாகவும் இதனால் இரண்டு வாரங்களுக்கு மலையாளத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.