இந்த வயதிலும் கட்டுமஸ்தான உடலை வைத்திருக்கும் சரத்குமாருக்கு கொரோனா.! தந்தை நிலை பற்றி வரலட்சுமி சரத்குமார் தகவல்.!

sarathkumar
sarathkumar

உலக நாடுகளையே மிரட்டி வந்த கொரனா இந்தியாவிலும் மிக வேகமாக பரவி வருகிறது அதுவும் கடந்த 5 மாதங்களாக கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக் கொண்டேதான் இருக்கிறது. நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டேதான் செல்கிறது.

கொரோனாவிற்க்கு இன்னும் உலக நாடுகள் முழுவதும் மருந்து கண்டுபிடிக்கவில்லை அதனால் மக்கள் அனைவரும் கவலையில் இருக்கிறார்கள் சாதாரண மக்கள் முதல் பிரபலங்கள் வரை அனைவரும் கவலையில் இருக்கிறார்கள்.

அதேபோல் தமிழ் சினிமாவில் பல பிரபலங்கள் தொற்றால் பாதிக்கப்படும் குணமடைந்ததும் இறந்தும் இருக்கிறார்கள்.

sarathkumar
sarathkumar

இந்த நிலையில் தற்போது பிரபல நடிகரான சரத்குமார் 66 வயதிலும் கட்டுமஸ்தான உடலை வைத்திருக்கும் இவருக்கு கொரனோ தொற்று பரவியுள்ளது.  இதனை உறுதி செய்யும் வகையில் அவரது மகளும் நடிகையுமான வரலட்சுமி சரத்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதவியில் அப்பாவிற்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது அவர் பாதுகாப்பாக இருக்கிறார் குணமாகி வருகிறார் அவரைப்பற்றி தொடர்ந்து தெரிவிக்கிறேன் என்று கூறியுள்ளார்.