உலக நாடுகள் முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வந்த நிலையில் இந்தியாவிலும் வைரஸ் பரவி வருகிறது, இந்தியாவில் பல மாநிலங்களில் கொரோனா வைரஸ் பரவி வருவதால் 144 தடை விதிக்கப்பட்ட கடைபிடிக்கப்பட்டு வருகிறது, அதனால் மக்கள் வீட்டிலேயே இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் அரியலூர் மாவட்டத்தில் 2 நபருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது அதில் ஒருவர் சென்னையில் பணிபுரிந்த ஊழியர் மற்றொருவர் செந்துறையை சேர்ந்தவர், மேலும் டெல்லி மாநாட்டில் கலந்துகொண்ட பலரையும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணித்து வந்தார்கள் இந்த நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இருவரும் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்கள்.
இந்த நிலையில் தற்போது மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, மெடிக்கலில் இருவரும் பணிபுரிந்துள்ளார் இவர்களில் ஒருவர் செந்துறை நகரில் வசித்த 52 வயது பெண் ஒருவரையும், ராயபுரம் கிராமத்தில் வசித்த 24 வயது பெண்ணையும் கொரோனா தொற்று இருப்பதால் இருவரையும் திருச்சி அரசு மருத்துவக்கல்லூரியில் உள்ள கொரோனா சிறப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதுமட்டுமில்லாமல் இந்த இரண்டு நபர்களின் குடும்பத்தை சேர்ந்த 10 பேருக்கு நேற்று இரவே பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு திருச்சிக்கு அனுப்பப்பட்டுள்ளது, டெல்லி சென்று வந்த இஸ்லாமியருக்கு கொரோனா இல்லாதவகையில் அவர்கள் கடையில் பணிபுரிந்த இவர்களுக்கு எப்படி கொரோனா நோய் தொற்று ஏற்பட்டு இருக்கும் என்பது புரியாத புதிராக இருக்கிறது, இது எப்படி சாத்தியம் என மக்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
இந்த இரண்டு பெண்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் செந்துறை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது அது மட்டுமில்லாமல் மக்கள் மிகவும் அச்சம் அடைந்துள்ளார்கள், இந்த நிலையில் மீண்டும் இஸ்லாமியர்களுக்கு கொரோனா தொற்று பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் முடிவு செய்துள்ளார்கள்.