சினிமா உலகம் காலத்திற்கு ஏற்றவாறு முன்னேறிக் கொண்டே செல்கின்றது அதற்கு ஏற்றார் போல இயக்குனர்களும் ஒரு திரைப்படத்தை மிகப்பெரிய பொருட்செலவில் பிரம்மாண்டமாகவும், HD தரத்தில் நல்லபடியாக படத்தை எடுத்து வருகின்றனர். அந்த வகையில் சினிமாவில் தெலுங்கு சினிமாவில் பிரம்மாண்ட பொருட்செலவில் சூப்பர் ஹிட் படங்களை எடுத்து அசத்தி வருபவர் இயக்குனர் ராஜமௌலி.
2015ஆம் ஆண்டு பாகுபலி என்னும் திரைப்படத்தை எடுத்து இருந்தார் அதை தொடர்ந்து அந்த படத்தின் இரண்டாம் பாகம் 2017ஆம் ஆண்டு கொடுத்து இருந்தார். இந்த இரண்டு படங்களும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்ப்பை பெற்றது மேலும் வசூலில் ஆயிரம் கோடிக்கு மேல் அள்ளி புதிய வசூல் சாதனை படைத்தது.
இந்த திரைப் படத்தில் ஹீரோவாக பிரபாஸ் நடித்தார் அவருடன் இணைந்து ராணா, ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ், அனுஷ்கா, தமன்னா, நாசர் போன்ற பல டாப் நட்சத்திர பட்டாளங்கள் நடித்து அசத்தி இருந்தனர். இந்தத் திரைப்படத்தை தொடர்ந்து ராஜமௌலி தற்போது தெலுங்கு சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர்காளான ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரண் வைத்து “RRR” என்ற திரைப்படத்தை எடுத்து முடித்துள்ளார்.
இந்த திரைப்படம் அடுத்த வருடம் வெளிவர காத்து இருக்கிறது. இப்படி இருக்கின்ற நிலையில் பாகுபலி படத்தில் இடம்பெற்றுள்ள சில முக்கிய சண்டை காட்சிகள் காப்பி அடிக்க பட்டுள்ளதாக சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு வீடியோ தீயாய் பரவி வருகிறது. நெட்டிசன் ஒருவர் அந்த வீடியோவை பதிவு செய்து உள்ளார்.
இதோ அந்த வீடியோவை நீங்களே பாருங்கள்.
Jai Bahubali… pic.twitter.com/UrrRk2NazK
— Yuvacastic (@yuvacastic) September 7, 2021