coolie teaser released : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அன்றிலிருந்து இன்று வரை தன்னுடைய இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார் இவருக்கு போட்டியாக இளம் நடிகர்கள் கூட தாக்கு பிடிக்க முடியாத அந்த அளவு இன்னும் இளமையான தோற்றத்துடன் சினிமாவில் ஜொலித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் ஞானவேல் ராஜா இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் அந்த திரைப்படத்திற்கு வேட்டையன் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் கூட்டணி சேர்ந்துள்ளார் இந்த திரைப்படத்திற்கு தற்காலிகமாக தலைவர் 171 என அழைக்கப்பட்டது ஆனால் தற்பொழுது இந்த திரைப்படத்தின் டீசர் மூலம் படத்தின் டைட்டிலை அறிவித்துள்ளார்கள். இது திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் பல மடங்கு அதிகரித்துள்ளது.
அதற்கு காரணம் ஏனவே லோகேஷ் கனகராஜ் திரைப்படங்கள் மக்கள் மத்தியில் ல்ல வரவேற்பு பெற்றது இந்த நிலையில் இந்த திரைப்படத்திற்கு கூலி என டைட்டில் வைத்துள்ளார்கள் ஏற்கனவே இதன் போஸ்டர் வெளியாகி ரசிகர் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது அந்த போஸ்டரில் ரஜினி கையில் கடிகாரங்களால் விளக்கு போட்டிருப்பது காட்டப்பட்டது இந்த நிலையில் தற்பொழுது டைட்டில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.
இந்த டீசரில் தங்கத்தால் ஆன வாட்ச் காசுகள் என அனைத்தும் பதுக்கபட்டுள்ளது அந்த இடத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் வந்து ரவுடிகளை அடிக்கும் சண்டை காட்சி இடம் பெற்றுள்ளது இந்த சண்டை காட்சி மிரட்டலாக இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்துள்ளார்கள்.
https://youtu.be/6xqNk5Sf5jo