சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் ஞானவேல் ராஜா இயக்கத்தில் வேட்டையன் திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு மிகவும் பரபரப்பாக பட பிடிப்பு நடைபெற்று வருகிறது. அதுமட்டுமில்லாமல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் 171-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
தற்காலிகமாக இந்த திரைப்படத்திற்கு 171 என தலைப்பு வைக்கப்பட்டது ஆனால் சமீபத்தில் இந்த திரைப்படத்தின் டீசர் வெளியாகியது இந்த படத்திற்கு டைட்டிலாக கூலி என வைத்துள்ளார்கள் டீசரில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தங்கம் கடத்தும் கும்பலை அடித்து துவம்சம் செய்கிறார். மேலும் இந்த திரைப்படத்தில் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடித்துள்ளார் என கூறப்படுகிறது.
என்ன ஆட்டம் போட்ட வசமா மாட்டிகிட்டியா… ரோகினியை படுத்தி எடுக்கும் விஜயா… குஷியில் முத்து
அதுமட்டுமில்லாமல் கூலி படத்தில் நாகர்ஜுனா, சத்தியராஜ், ஷோபனா, சுருதிஹாசன் என மிகப் பெரிய நட்சத்திரபட்டாலமே நடித்து வருகிறார்கள் ஆனால் இதுவரை இந்த திரைப்படத்தில் யார் யார் நடிக்கிறார்கள் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை பட குழு இதுவரை வெளியிடவில்ல. மேலும் லோகேஷ் கனகராஜ் இதற்கு முன்பு எடுத்த லியோ திரைப்படம் ஒரு சில ரசிகர்களிடம் பெரிதாக வரவேற்பு பெறவில்லை.
ஆனால் லியோ திரைப்படத்திற்கு முன்பு வெளியாகிய விக்ரம் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது அதுமட்டுமில்லாமல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்தது தமிழ் சினிமாவை திரும்பிப் பார்க்க வைத்தது.. இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கூலி திரைப்படத்திற்காக 260 கோடி வரை சம்பளமாக பேசி உள்ளதாக கூறப்படுகிறது இந்த தகவல் எந்த அளவு உண்மையான தகவல் என்று தெரியவில்லை ஆனால் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.