பேர கேட்டாலே சும்மா அதிருதில்ல.. கூலி படத்தில் ரஜினியின் பெயர் இதுதான்

coolie
coolie

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி கூலி படத்தில் நடித்து வருகிறார். இதன் டைட்டில் வீடியோ சில மாதங்களுக்கு முன்பு வெளிவந்து வைரலானது. அதை அடுத்து கடந்த சில நாட்களாக படத்தில் நடிக்கும் நடிகர்களின் போஸ்டர் பெயரோடு வெளியாகி வருகிறது.

அதன்படி சைமன் கேரக்டரில் நாகர்ஜுனா ப்ரீத்தி கேரக்டரில் ஸ்ருதிஹாசன் ராஜசேகர் என்ற கேரக்டரில் சத்யராஜ் ஆகியோர் நடிக்கின்றனர். அதேபோல் கன்னட நடிகர் உபேந்திரா காலீசா என்ற கேரக்டரிலும் மலையாள நடிகர் சௌபின் ஷாகீர் தயால் என்ற கேரக்டரிலும் நடிக்கின்றனர்.

coolie-poster
coolie-poster

இப்படியாக வெளிவந்த போஸ்டர் அனைத்துமே ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. அதை அடுத்து தயாரிப்பு தரப்பு இன்று ரஜினியின் பெயர் என்ன என்ற ட்விஸ்ட்டை உடைத்துள்ளனர். அதன்படி கூலியில் தலைவரின் கேரக்டர் பெயர் தேவா என தெரிய வந்துள்ளது.

அந்த போஸ்டரில் 1421 என்ற எண் பொறிக்கப்பட்ட பேட்சை சூப்பர் ஸ்டார் கையில் வைத்திருக்கிறார். இளமையான லுக்கில் இருக்கும் அவருடைய தோற்றமும் இந்த எண்ணும் ரசிகர்களுக்கு வேறொரு கதை சொல்கிறது.

மேலும் பட அறிவிப்பு வரும்போது DISCO என லோகேஷ் ஹின்ட் கொடுத்திருந்தார். அதன்படி D என்பது தேவா என்ற பெயரை குறிக்கிறது என்றால் அடுத்தடுத்த எழுத்துக்களின் அர்த்தம் என்னவாக இருக்கும் என நெட்டிசன்கள் இப்போது தேட தொடங்கிவிட்டனர்.

ஆக மொத்தம் லோகேஷ் ஆயிரம் கோடியை குறிவைத்து நகர தொடங்கி விட்டார். பான் இந்தியா லெவலில் பிரம்மாண்டமாக உருவாகும் படம் சர்வதேச அளவில் சரித்திரம் படைக்கும் என ரசிகர்கள் கூச்சலிட்டு வருகின்றனர்.