சினிமா உலகில் எப்போதுமே உண்மை மற்றும் நாவல் கதைகளுக்கு நல்ல மதிப்பு இருக்கிறது அந்த வகையில் மணிரத்தினம் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை படமாக எடுக்க பல தடவை முயற்சி செய்தார் ஆனால் அவருடைய கனவு ஒவ்வொரு தடவையும் உடைந்தது ஆனால் அதற்காக முயற்சி செய்யாமல் இல்லை தொடர்ந்து முயற்சி செய்து கொண்டிருந்தார்.
ஒரு வழியாக லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் உடன் கைகோர்த்து பொன்னியின் செல்வன் படத்தை இரண்டு பாகங்களாக எடுத்தார் முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று 500 கோடிக்கு மேல் அள்ளி வெற்றி கண்டது அதனைத் தொடர்ந்து பொன்னியின் செல்வன் பார்ட் 2 திரைப்படம் இன்று உலக அளவில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
படத்தில் விக்ரமா – ஐஸ்வர்யா ராய் சந்திக்கும் காட்சிகள் ஒவ்வொன்றும் மிரட்டலாக இருப்பதாகவும் கிளைமாக்ஸ் வேற லெவலில் இருப்பதாகவும் பலரும் சொல்லி வருகின்றனர். தொடர்ந்து இந்தப் படத்திற்கான விமர்சனம் பாசிட்டிவாகவே வருவதால் நிச்சயம் இந்த திரைப்படம் முதல் நாளில் நல்ல வசலை அள்ளுவதோடு மட்டுமல்லாமல் அடுத்தடுத்த நாள்களிலும் நல்ல வசூலை அள்ளி அதிக நாட்கள் ஒடி சாதனை படைக்கும் என கூறப்படுகிறது.
இந்த படத்தை பார்க்க ரசிகர்களையும், மக்களையும் தாண்டி சினிமா பிரபலங்களும் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர் இன்று கூட வடபழனில் உள்ள ஒரு திரையரங்கிற்கு விக்ரம், ஜெயராம் போன்றவர்கள் சென்று படத்தை பார்த்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இருக்கின்ற நிலையில் காமெடி நடிகர் கூல் சுரேஷ் பொன்னியின் செல்வன் படத்தை பார்க்க வந்துள்ளார்.
இவர் படத்தின் கதைக்கு ஏற்றவாறு லுக்கில் வருவது வழக்கம் அதன்படி பொன்னியின் செல்வன் இரண்டாவது பாகத்திற்கு குதிரையில் வந்து இறங்கினார் அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது இதை பார்த்த பலரும் படக்குழு செய்கிற பிரமோஷனை விட நீங்களே செய்யறது தான் சூப்பர் எனக்கூறி கலாய்த்த வருகின்றனர் இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்..
With Coolsuresh 😀#PonniyinSelvan2 #PS2 pic.twitter.com/LBfoEzkJub
— Trendsetter Bala (@trendsetterbala) April 28, 2023