Cool Suresh : 90 களில் தொடர்ந்து வில்லனாக நடித்து ரசிகர்களை மிரட்டியவர் மன்சூர் அலிகான் இவர் சிறு இடைவெளிக்கு பிறகு இரண்டாவது இன்னிசை ஆரம்பித்து தொடர்ந்து படங்களில் காமெடி வில்லனாகவும், குணசித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். தற்பொழுது லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்தில் முழு வில்லனாக அவர் தென்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது அதனை தொடர்ந்து கைவசம் சரக்கு மற்றும் ஒரு சில புதிய படங்களிலும் கமிட் ஆகியிருக்கிறார் இந்த நிலையில் நடித்த சரக்கு படம் குறித்து ஒரு தகவல் வெளியாகியுள்ளது சரக்கு படம் முழுக்க முழுக்க சமூகத்திற்கு தேவையான ஒரு படமாக இருக்கும் என தெரிய வருகிறது.
மன்சூர் அலிகான் நடித்ததோடு மட்டுமல்லாமல் இந்த படத்தை தயாரித்தும் இருக்கிறார் அவருடன் இணைந்து வலினா பிரின்ஸ் நடித்துள்ளார். மேலும் நாஞ்சில் சம்பத், மொட்ட ராஜேந்திரன், கோதண்டம், ரெடின் கிங்ஸ்லி, சேது, தீனா, லொள்ளு சபா மனோகர், பயில்வான் ரங்கநாதன், பாரதி கண்ணன், வினோதினி என பலர் நடித்துள்ளனர் இந்த படத்தை ஜெயக்குமார் கே. இயக்கி உள்ளார்.
இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை விஜய் சேதுபதி வெளியிட்டார் அதனைத் தொடர்ந்து நேற்று இந்த படக்குழு செய்தியாளர்களை சந்தித்தது அப்பொழுது பல நடிகர் நடிகைகள் பேசினார். அவர்களைத் தொடர்ந்து ஸ்கூல் சுரேஷ் பேசினார் இவர் பேச வரும் போது திடீரென தனது பக்கத்தில் இருந்த ஒரு பெண்ணுக்கு மாலையை போட்டு விட்டார் இதை பார்த்த பலரும் கடுப்பாகினர். அதற்கு கூல் சுரேஷ் சொன்னது.. நமக்காக எல்லோருக்கும் ஒரு சின்ன வரவேற்பு கொடுக்கிறார்.
அதற்காக புதிது புதிதாக யோசித்து கானா குயிலில் பேசுறாங்க அதற்காக தான் மாலை அணிவித்தேன் என கூறினார். பிறகு நைசாக ஏதாவது தப்பா எடுத்துக்கிட்டிங்களா என அவர் பேசினார் ஆனால் அந்த பெண்ணுக்கு கோபம் வந்துவிட்டது. அந்த வீடியோ இணையதள பக்கத்தில் வைரல் ஆகி வருகிறது இதை பார்த்த ரசிகர்கள் கூல் சுரேஷ் பிரபலமாக பிரபலமாக அவருடைய நடவடிக்கை வேற மாதிரி போகுது என கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர். இதோ நீங்களே பாருங்கள்