பொன்னியின் செல்வன் பார்க்க குதிரையில் கெத்தாக வந்த கூல் சுரேஷ்.! வைரலாகும் புகைப்படம்

cool-suresh

கூல் சுரேஷ் தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்கள் காமெடி நடிகர் என அசத்தி வந்தவர். ஒரு கட்டத்திற்கு மேல் புதுமுக நடிகர்கள் சினிமாவில் வரவே இவருக்கு வாய்ப்பு இல்லாமல் போனது.  இந்த நிலையில் கூல் சுரேஷ் ஒவ்வொரு திரைப்படமும் வெளியாகும் போது திரையரங்கிற்கு சென்று வென்ந்து தணிந்தது காடு என்று கூறிவிட்டு அந்த படத்தை புரொமோட் செய்து விடுவார்.

அதேபோல் நடிகர் சிம்பு நடித்து வெளியான வென்ந்து தணிந்தது காடு படத்தின் ப்ரொமோட் செய்தது அந்தப் படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் கூல் சுரேஷ் ஐ போன் வாங்கி கொடுத்துள்ளார். இந்நிலையில் மணிரத்தினம் இயக்கத்தில் திரை உலகைச் சேர்ந்த முன்னணி நடிகர்கள் மற்றும் பலர் நடித்திருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது.

இந்த படத்தை பார்க்க கூல் சுரேஷ்  திரையரங்கிற்கு குதிரையில் ஏறி வந்து சாகசம் செய்துள்ளார் அதுமட்டுமல்லாமல் வெந்து தணிந்தது காடு பொன்னியன் செல்வதற்கு வணக்கத்த போடு என்று வசனத்தை எடுத்து வந்து திரையரங்கத்தில் தூக்கி காட்டி அலப்பறை செய்துள்ளார்.

cool suresh
cool suresh

அவர் வந்த அந்த குதிரை பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலனாக நடித்துள்ள சியான் விக்ரம் அவர்கள் பயன்படுத்திய குதிரை என்றும் அந்த குதிரையை நான் கடன் வாங்கி வாடகைக்கு எடுத்து வந்திருக்கிறேன் எனவும் கூல் சுரேஷ் தெரிவித்து இருந்தார்.

கூல் சுரேஷ் குதிரையில் வந்த போது எடுக்கப்பட்டுள்ள புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் பொன்னியின் செல்வன் திரைப்படம் இன்று அதிகாலை 4.30 மணி அளவில் திரையிடப்பட்டது. பொதுவாக மற்ற திரைப்படங்களை அதிகாலையில் திரையிடும்போது ரசிகர்கள் தான் முதலில் வந்து நிற்பார்கள் ஆனால் இன்று பொன்னியின் செல்வன் திரைப்படத்தை காண குடும்ப ஆடியன்ஸ் அதிக பேர் வந்திருந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதோ அந்த வீடியோ…