வாக்கு கொடுத்தது போலவே பத்து தல படத்திற்கு ஹெலிகாப்டரில் வந்த கூல் சுரேஷ்.! வைரல் வீடியோ..

தொடர்ந்து பல திரைப்படங்களை விமர்சனம் செய்து வரும் நடிகர் ஸ்கூல் சுரேஷ் பேட்டி ஒன்றில் சிம்புவின் பத்து தல படத்திற்கு ஹெலிகாப்டரில் தான் வருவேன் என்னுடைய வீட்டை விட்டு விற்றாவது கண்டிப்பாக வருவேன் என வாக்கு கொடுத்த நிலையில் தற்போது அதனை நிறைவேற்றிய உள்ளார். அதாவது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் சிம்பு சில வருடங்களுக்குப் பிறகு தொடர்ந்து வெற்றி திரைப்படங்களை தந்து வருகிறார்.

அந்த வகையில் கடைசியாக கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்திருந்த திரைப்படம் தான் வெந்து தணிந்தது காடு இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்த நிலையில் தற்போது மீண்டும் ஒபிலி என் கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு பத்து தல திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். திரைப்படத்தின் பாடல்கள், ட்ரெய்லர் போன்றவை வெளியாகி வைரலான நிலையில் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் பத்து தல திரைப்படம் இன்று ரிலீசாகி இருக்கும் நிலையில் இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரித்திருந்தார். இந்த படத்தின் முதல் காட்சி இன்று காலை 8 மணிக்கு திரையிடப்பட்டது இதற்காக தியேட்டர் பட்டாசு வெடித்து, மேல தாளங்கள் முழங்க சிம்பு ரசிகர்கள் மிகவும் கோலாலமாக கொண்டாடினர்.

cool suresh 1
cool suresh 1

சிம்புவின் தீவிர ரசிகர் தான் கூல் சுரேஷ் இவர் பத்து தல படத்தின் முதல் ஷோ பார்க்க ஹெலிகாப்டரில் வருவேன் என ஏற்கனவே கூறியிருந்தார் மேலும் தன்னுடைய வீட்டை விற்றாவது ஹெலிகாப்டரில் வருவேன் என ஆவேசமாக பேட்டி அளித்திருந்த நிலையில் ரசிகர்களும் இதனை எதிர்பார்த்து காத்து வந்தனர்.

cool suresh 2

ஆனால் இன்று காலை பொம்மை ஹெலிகாப்டர் ஒன்றை தூக்கிக்கொண்டு வந்து பத்து தல படத்தினை பார்ப்பதற்காக ஸ்கூல் சுரேஷ் வந்துள்ளார். சென்னை ரோகினி தியேட்டருக்குள் பொம்மை ஹெலிகாப்டர் வந்த நடிகர் கூல் சுரேஷ் பார்த்து ரசிகர்கள் சூழ்ந்து கொண்டனர் மேலும் அனைவரும் சிரிக்க அது குறித்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

cool suresh 3