குக் வித் கோமாளி : இன்றைய எபிசோட்டில் வெளியேறும் முக்கிய போட்டியாளர்.? யார் தெரியுமா.. வருத்தத்தில் ரசிகர்கள்.!

cook-with-komali-
cook-with-komali-

சின்னத்திரை டிவி சேனல்கள் மக்களை மகிழ்விக்க வாரம் தோறும் பல ரியாலிட்டி ஷோக்களை கொடுத்து என்டர்டைன்மென்ட் செய்து வருகின்றனர். அந்த வகையில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி பார்க்கும் நிகழ்ச்சியாக குக் வித் கோமாளி ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த நிகழ்ச்சி விஜய் டிவியில் சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரு தினங்களில் இரவில் ஒளிபரப்பாகி வருகிறது. முதல் சீசன் மக்களிடையே எதிர்பாராத அளவு வெற்றியை பெற தற்போது சீசன் சீசனாக ஒளிபரப்பாகி வருகிறது. இதனையடுத்து தற்போது குக் வித் கோமாளி மூன்றாவது சீசன் நடைபெற்று வருகிறது.

இதில்  கோமாளியாக தொடர்ந்து மூன்றாவது சீசனிலும் புகழ், சிவாங்கி, பாலா, மணிமேகலை, சுனிதா போன்ற பலரும் வாரம் ஒரு புதிய கெட்டப்பில் கலந்து கொண்டு மக்களை என்டர்டைன்மென்ட் செய்து வருகின்றனர். இந்த மூன்றாவது சீசனில் ஆரம்பத்தில் 12 போட்டியாளர்கள் கலந்துகொண்டு சிறப்பாக சமையல் செய்து நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

இதனிடையே வாரம் ஒரு போட்டியாளர் எலிமினேஷனில் இருந்து வெளியேறுவார். அந்த வகையில் இன்று ஒளிபரப்பான எபிசோடில் இந்த வார எலிமினேஷனில் இருந்து ரோஷினி ஹரிப்ரியன் குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி உள்ளார். இவர் இதற்கு முன் விஜய் டிவியில் டிஆர்பி யில் டாப்பில் இருக்கும் பாரதிகண்ணம்மா..

roshini
roshini

தொடரில் கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமடைந்தவர். இருந்தாலும் மேலும் மீடியா உலகில் பிரபலமடைய குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பயணித்தார். இதில் நீண்ட தூரம் பயணித்த ரோஷினி இன்று வெளியேறியது பலருக்கும் சோகத்தை கொடுத்துள்ளது.