ரஜினியின் “அண்ணாத்த” படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தும் நடிக்க முடியாமல் போன குக் வித் கோமாளி பிரபலம் – காரணம் இந்த நடிகரின் படம் தானாம்.

annantha-and-cook-with-komali-444
annantha-and-cook-with-komali-444

விஜய் டிவி தொலைக்காட்சி பல வித்தியாசமான நிகழ்ச்சிகளை நடத்துகின்றன. ஆனால் அவை அனைத்தும் மக்களிடையே சென்று வெற்றி அடைந்ததா என்றால் அது கேள்வி குறிதான். அப்படி வெற்றி பெற்ற நிகழ்ச்சிகள் என்றால் ஒரு சில நிகழ்ச்சிகள் தான் அதில் ஒன்று கமலஹாசன் தொகுத்து வழங்கும் மாபெரும் நிகழ்ச்சியான பிக் பாஸ் நிகழ்ச்சி.

மற்றொன்று என்றால் கண்டிப்பாக அது குக் வித் கோமாளி நிகழ்ச்சிதான் இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து இரண்டு சீசன்கள் வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில் நவம்பர் மாதம் மூன்றாவது சீசனும் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட குக்குகளும், கோமாளிகளும் பிரபலமான பின் வெள்ளித்திரையில் கால் தடம் பதித்துள்ளனர்.

அந்தவகையில் முதல் சீசனில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ரம்யா பாண்டியன் இந்த நிகழ்ச்சிக்கு பிறகு வெள்ளித்திரையில் பட வாய்ப்புகள் நிறைய கிடைத்தனர். அதுபோல் சிவாங்கி, புகழுக்கும் வெள்ளித்திரையில் பட வாய்ப்புகள் கிடைத்தன. இந்த நிகழ்ச்சியில் சீசன் 2வில் 9 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டவர் நடிகை தீபா.

இவர் இதே விஜய் டிவி தொலைக்காட்சியில் சரவணன் மீனாட்சி, அன்புடன் குஷி போன்ற பல சீரியல்களிலும் நடித்து வந்தவர். சீரியல்கள் மட்டுமல்லாமல் பல முன்னணி நடிகர்களின் படங்களிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருக்கிறார். விஜய் டிவி தொலைக்காட்சியில் மிஸ்டர் அண்ட் மிஸ்சஸ் சின்னத்திரை சீசன் 3 யில் அவரது கணவர் சங்கருடன் இணைந்து கலந்து கொண்டு வருகிறார்.

அதில் அவரது அழகான சிரிப்பு மற்றும் பேச்சினை மக்கள் அனைவரும் ரசித்து பார்க்கின்றனர். தற்போது இவர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து டாக்டர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் அண்மையில் இவர் பேசியுள்ள பேட்டி ஒன்றில் டாக்டர் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதுதான் எனக்கு அண்ணாத்த படத்தில் நடிக்க வாய்ப்பு வந்துச்சு ஆனால் கால்ஷீட் பிரச்சனை வரும்னு சொன்னாங்க அதனால் அண்ணாத்த படத்தில் என்னால் நடிக்க முடியாமல் போனது என்று கூறியுள்ளார்.

theepa
theepa