தற்பொழுது உள்ள அணில் தொலைக்காட்சிகளும் தொடர்ந்து ஏராளமான புதிய நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் ரசிகர்கள் மத்தியில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. பொதுவாக இவர்கள் காமெடியை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வருவதால் பலரின் மன அழுத்தம் குறைவதாக கூறி வருகிறார்கள்.
அந்த வகையில் அறிமுகமான காலகட்டத்தில் இருந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வரும் நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்துள்ளார்கள். மேலும் இந்நிகழ்ச்சியை பார்ப்பவர்கள் இதன் மூலம் எனக்கு மன அழுத்தம் குறைவதாகவும் மன மகிழ்ச்சியாக இருப்பதாகவும் கூறி வருகிறார்கள்.
இப்படிப்பட்ட நிலையில் இந்நிகழ்ச்சியில் பணியாற்றி வருபவர்கள் திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பையும் தொடர்ந்து பெற்று வருகிறார்கள். அந்த வகையில் நடிகர் புகழை கூறலாம் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் ஒரு பட்டி தொட்டி அங்கு பிரபலமடைந்த இவர்கள் தற்பொழுது இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்று வந்துள்ளார்.
இவரைத் தொடர்ந்து தற்பொழுது மீண்டும் ஒரு பிரபலம் திரைப்படத்தில் ஹீரோவாக நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றுள்ளார். அதாவது விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பல ஆண்டுகளாக தொகுப்பாளராக பணியாற்றி வருபவர் தான் ரக்ஷன். இவர் இந்நிகழ்ச்சுக்குப் பிறகு துல்கர் சல்மானுடன் இணைந்து கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால் திரைப்படத்தில் அவருக்கு தோழனாக நடித்திருந்தார்.
அதன் பிறகு திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தொகுத்து வந்தார். இப்படிப்பட்ட தற்பொழுது புதிய திரைப்படம் ஒன்றில் ஹீரோவாக நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றுள்ளார். இவர் ஹீரோவாக நடிக்க இருக்கும் முதல் திரைப்படத்தினை யோகேந்திரன் என்பவர் இயக்கவுள்ளார் மேலும் இத்திரைப்படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை.கதாநாயகியாக விஷாமா திமான் நடிக்கிறார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் தீனா, பிரான்ஸ்டர் ராகுல் ஆகியோர் நடிக்கின்றனர்.