விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஏராளமான நிகழ்ச்சிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது அந்த வகையில் சில ஆண்டுகளாக ஒலிப்பரப்பாகி வரும் நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி.இந்த நிகழ்ச்சியில் கடந்த மூன்று வருடங்களாக கோமாளியாக பணியாற்றி வருபவர் தான் சுனிதா இந்த நிகழ்ச்சியின் மூலம் இவர் தற்பொழுது ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்துள்ளார்.
மேலும் இவருடைய தமிழ் பேச்சு மற்றும் காமெடி போன்றவை ரசிகர்கள் மத்தியில் பெரிதும் வரவேற்பை பெற்று வருகிறது.இவருக்கு பெரிதாக தமிழ் பேச வராது என்பதால் சில வார்த்தைகள் மிகவும் தவறாக உச்சரிப்பார் எனவே மற்ற போட்டியாளர்கள் இவரை பங்கமாக கலைப்பார்கள் இதன் மூலம் தமிழ் ரசிகர்களின் ஃபேவரட் நடிகையாக மாறினார்.மேலும் குக் வித் கோமாளி சீசன் 3 ல் கலந்து கொண்ட போட்டியாளர்களில் சந்தோஷ பிரதாப்பும் ஒருவர் இவர் இவரை சைட் அடிப்பது போல சுனிதா பின்னாடியே சுற்றி வருவார்.
எனவே இவர்களுடைய ரொமான்ஸ் மற்றும் காமெடி போன்றவை ரசிகர்கள் ரசித்து வந்தார்கள் தற்பொழுது நிலையில் சந்தோஷ் பிரதாப் நடிக்க இருக்கும் ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக சுனிதா அது குறித்த வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். மேலும் அந்த வீடியோவில் இது வெறும் டிரைலர் தான் என்றும் விரைவில் இந்த படத்தின் அறிவிப்பு வெளிவரும் என்றும் அவர் தெரிவித்து இருக்கிறார்.
மேலும் இது ரசிகர்கள் மத்தியில் பெரிதும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்குபெற்ற பல பிரபலங்கள் தற்பொழுது வெளி திரையில் தொடர்ந்து நடிப்பதற்கான வாய்ப்பை பெற்று வந்துள்ள நிலையில் கடைசியாக சுனிதாவும் வெள்ளித்திரை நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றுள்ளார் எனவே ரசிகர்கள் பலரும் இவருக்கு தங்களுடைய வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.
வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.