நடிகை சிவாங்கி ஒரு குறும்படத்தின் மூலம் அனைவராலும் அறியப்பட்டார் அதன் பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் மூலம் பிரபலமான நடிகை சிவாங்கி பல ரசிகர்களை பாட்டு பாடி கவர்ந்து உள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு இவர் அழகாக பாடுவார் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று.
இதனை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேலும் பிரபலமானார் நடிகை சிவாங்கி. அதன் பிறகு சினிமாவிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது அதன்படி நடிகை சிவாங்கி நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டான் திரைப்படத்தில் பிரியங்கா மோகன் அவர்களுக்கு தோழியாக நடித்து பிரபலமானார்.
இப்படி கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வரும் நடிகை சிவாங்கி தற்போது முழு வீச்சில் பட வாய்ப்புக்காக புதிய உக்கிதியை கையில் எடுத்து உள்ளார். அதாவது இளம் நடிகைகள் சமூக ஊடகங்களில் புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம் தான் அதேபோல் நடிகை சிவாங்கியும் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஒரு நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
அப்படி இவர் வெளியிடும் புகைப்படங்கள் அனைத்துமே ட்ரெண்டாகி வருகிறது அந்த வகையில் தற்போது ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அதில் ஆள் அடையாளமே தெரியாத அளவிற்கு அவர் மாறியிருக்கும் அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இதைப் பார்த்த ரசிகர்கள் சிவாங்கியா இது ஆள் அடையாளமே தெரியாமல் மாறி இருக்காங்லே என்றும் இவருடைய இந்த மாற்றம் அனைவரையும் கவர்ந்து வருகிறது என்றும் கூறி வருகின்றனர். இவர் வெளியிட்ட இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பழைய சிவாங்கி போல் இல்லாமல் புதுசு சிவாங்கியாக மாறி இருப்பது அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கிறது அந்த அளவிற்கு தன்னுடைய தோற்றத்தை மாற்றியுள்ளார் நடிகை சிவாங்கி.
இதோ அந்த புகைப்படம்..