விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்தவர் சிவாங்கி. இவரின் சிறந்த குரல் வளத்தால் அனைவர் மனதையும் வெகுவாக கவர்ந்தார்.
இதனைத் தொடர்ந்து விஜய் டிவியில் தற்போது டி.ஆர்.பி யில் முன்னணி நிகழ்ச்சியாக வளம் வரும் குக் வித் கோமாளி ஷோ மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமடைந்து ரசிகர்கள் மனதை வெகுவாக கவர்ந்தார்.
இதனை தொடர்ந்து இவருக்கு நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வரும் டான் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.
இந்நிலையில் பிரதமர் மோடி பல திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக தமிழகம் வரவுள்ளார். இந்நிலையில் நெட்டிசன்கள் #GoBackModi என்பதை ட்விட்டரில் ட்ரென்டிங்காக்கி வருகிறார்கள்.
பிரதமர் மோடிக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் #TNwelcomesModi என்பதை ட்விட்டரில் ட்ரெண்டாக்கி வருகிறார்கள்.
இந்நிலையில் சிவாங்கி தனது ட்விட்டரில் #GoBackModi எனப் அறிவித்திருந்தது அனைத்து ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஆனால் சிவாங்கியின் பெயரில் போலியான ஐடியிலிருந்து வேறு யாரோ என்று தெரியவந்தது.