cooku with comali season 3 பைனலிஸ்டுக்கு முன்னேறிய முதல் நபர் – யார் தெரியுமா .? வியப்பில் ரசிகர்கள்.

cook with komali

சின்னத்திரையில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி முதல் இரண்டு சீசன்கள் வெற்றியடைந்ததை தொடர்ந்து தற்போது மூன்றாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீசனில் போட்டியாளராக ஆரம்பத்தில் பலர் கலந்து கொண்டு சிறப்பாக சமையல் செய்து.

நிகழ்ச்சியை சிறப்பித்த நிலையில் ஒவ்வொரு வார இறுதியிலும் ஒரு போட்டியாளர் வெளியேற தற்போது 5 போட்டிகள் உள்ளனர். ஆம் தர்ஷன், ஸ்ருதிகா, முத்துக்குமாரன், அம்மு அபிராமி, விதியுலேகா போன்ற ஐந்து பைனலிஸ்ட் இருக்கின்ற நிலையில் நேற்று டிக்கெட் டு பினாலே டாஸ்க் நடைபெற்றது.

இதற்கு சிறப்பு விருந்தினராக இரவின் நிழல் படத்திலிருந்து நடிகர் பார்த்திபன் மற்றும் படத்தின் ஹீரோயின் பிரிகிடா நிகழ்ச்சிக்கு வருகை தந்து போட்டியாளர்கள் மற்றும் கோமாளிகளிடம் மகிழ்ச்சியாக பேசி சென்றனர். இந்த நிலையில் டாப் 5 போட்டியாளர்களில் சிறப்பாக சமையல் செய்து முதல் பைனல் லிஸ்ட் ஆக நடுவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஸ்ருதிகா வெற்றி பெற்றார்.

செஃப் தாமு மற்றும் வெங்கடேஷ் பட் இருவரும் ஸ்ருதிகாவின் பெயரை சொல்ல ஸ்ருதிகா முதலில் ஷாக் ஆகி பின்பு மகிழ்ச்சி அடைந்தார். இதனால் ஸ்ருதிஹாவிற்கு மற்ற போட்டியாளர்கள் மற்றும் கோமாளிகள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இவர்களைத் தொடர்ந்து சமூக வலைத்தளங்களிலும் ஸ்ருதிகாவிற்கு பலரும் கமாண்டுகள் மூலம் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

shuruthika
shuruthika

மேலும் குக் வித் கோமாளி இன்னும் ஓரிரு எபிசோடுகளில் இறுதி நிகழ்ச்சியை எட்டி விடும் என்பதால் இறுதியில் யார் குக் வித் கோமாளி மூன்றாவது சீசனின் டைட்டிலை வின் செய்கிறார் என்பதே தற்போது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருந்த வருகின்றன.