ஒட்டுமொத்த காமெடி நடிகர்களையும் ஓரங்கட்ட சினிமாவில் களம் இறங்கும் புகழ்.!! வரிசைகட்டும் திரைப்படங்கள்..

pugazh3
pugazh3

விஜய் டிவியின் மூலம் பல பிரபலங்கள் வெள்ளித்திரைக்கு அறிமுகமாகி முன்னணி நடிகர்களாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.  அந்த வகையில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமாகி தற்போது தனது காமெடி திறமையினால் வரிசையாக பல படங்களில் நடிக்க கமிட்டாகி உள்ளவர் நடிகர் புகழ்.

சிவகார்த்திகேயனின் அடுத்ததாக இவர்தான் விஜய் டிவியிலிருந்து வெள்ளித்திரைக்கு அறிமுகமாகி கொடிகட்டி பறந்து வருகிறார். அந்த வகையில் தற்போது விஜய் டிவியில் பிரபல ரியாலிட்டி ஷோவான  குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இவரின் எதார்த்த காமெடியினால் பட்டி தொட்டி எங்கும் பிரபலம் அடைந்துள்ளார்.

இதன் மூலம் பிரபலமடைந்ததற்கு தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்க வாய்ப்பு குவிந்து வருகிறது. அந்த வகையில் தற்பொழுது தல அஜித்தின் வலிமை, விஜயின் தளபதி 65 சிவகார்த்திகேயன் டான்,அருண் விஜயின் AV33 படம் இன்னும் பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதியின் VJS 46 படத்திலும் காமெடி நடிகராக கமிட்டாகியுள்ளார். இப்படத்தை வருத்தப்படாத வாலிபர், ரஜினிமுருகன் சீமராஜா போன்ற படங்களை இயக்கிய பொன்ராம் இயக்க உள்ளார்.

இந்நிலையில் சமீப காலமாகவே அனைத்து முன்னணி நடிகர்கள் படத்திலும் யோகிபாபு காமெடி கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். ஆனால் தற்பொழுது பெரும்பாலான படத்தில் புகழ் தான் நடித்து வருகிறார். எனவே பிரபல யோகிபாபு வையே ஓவர்டேக் செய்துவிடுவார் போல புகழ் என்று கூறி வருகிறார்கள்.