விஜய் டிவியில் தற்பொழுது குக் வித் கோமாளி சீசன் 4வது நிகழ்ச்சி தொடங்கியுள்ள நிலையில் இந்நிகழ்ச்சியில் இருந்து ஓட்டேரி சிவா விலகியுள்ளார். எனவே எதன் காரணமாக இவர் விலகினார் என சரியான காரணம் தெரியாமல் இருந்து வந்த நிலையில் தற்போது அவர் பிரபல ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார் அது குறித்த தகவல்கள் தற்பொழுது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
விஜய் டிவியில் ஏராளமான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வந்தாலும் ரசிகர்கள் மனதை வெகுவாக கவர்ந்த நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி இந்நிகழ்ச்சியை கடந்த மூன்று சீசங்களாக மிகவும் நல்ல வரவேற்பினை பெற்று வந்த நிலையில் தற்பொழுது நான்காவது சீசனும் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் ஜிபி முத்து, ஓட்டேரி சிவா, சிங்கப்பூர் தீபன், சின்னத்திரை நடிகை ரவினா தகா, சுனிதா, மோனிஷா, மணிமேகலை, உள்ளிட்டோர் கோமாளிகளாக பணியாற்றி வருகின்றனர்.
அந்த வகையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சிகள் புதிதாக கலந்து கொண்டவர் தான் ஓட்டேரி சிவா இவர் இந்நிகழ்ச்சியின் பொழுது குடித்துவிட்டு வருவதாகவும் நிதானம் இல்லாமல் செயல்படுவதனால் விஜய் டிவி ஓட்டேரி சிவாவை நீக்கியதாக தகவல்கள் சமூக வலைதளத்தில் வைரலானது எனவே இவருக்கு பதிலாக வேறு ஒருவரை களம் இறக்க உள்ளதாகவும் தகவல் கிடைத்தது.
இந்நிலையில் ஊடகம் ஒன்று இருக்கு பேட்டியளித்த ஓட்டேரி சிவா தொகுப்பாளர்கள் கேட்கும் பல கேள்விகளுக்கு பதில் அளித்தார் அந்த வகையில் தொகுப்பாளர் நீங்கள் குடித்துவிட்டு நடிப்பதினால் தான் உங்களுக்கு பல வாய்ப்புகள் கைநழுவி போடுவதாக தகவல்கள் பரவுவதைப் பற்றி கேட்டார். அதற்கு பதில் அளித்த ஓட்டேரி சிவா நான் குடிக்க மாட்டேன் சாப்பாடு எவ்வளவு கொடுத்தாலும் சாப்பிடுவேன் நான் பிரபலமாகி அதிகமாக சம்பாதிக்கிறேன் என்று அவர்களுக்கு பொறாமை அதனால் தான் அப்படி கூறுகின்றனர் நான் மது அருந்த மாட்டேன் அவர்கள் சொல்லுவது பொய் என்று கூறினார்.
மேலும் தற்பொழுது நான் விஷால் அவர்களுடன் தான் இருந்து வருவதாக கூறி அவரிடம் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியது குறித்து கேட்ட பொழுது அதற்கு பதில் அளித்த ஓட்டேரி சிவா என்னை நிகழ்ச்சியில் இருந்து நீக்கவில்லை விரைவில் அழைக்கிறோம் என்று கூறினார்கள் என்றும் தன்னுடைய ரசிகர்கள் தனக்கு ஆதரவு தரும்படிக்கும் பொய் செய்திகளை யாரும் நம்ப வேண்டாம் எனவும் கண்ணீர் மல்க கூறி உள்ளார்.