தற்பொழுது உள்ள பலர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைய வேண்டும் என்பதற்காக சோசியல் மீடியாவில் தனது கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் புதிதாக யூடியூப் சேனல் ஆரம்பிப்பது போன்ற பல விஷயங்களை செய்து வருகிறார்கள்.
அந்த வகையில் விஜய் டிவியில் நீண்ட காலங்களாக தொகுப்பாளினியாக பணியாற்றி ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் தான் மணிமேகலை. இவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது மட்டுமல்லாமல் பல நிகழ்ச்சிகளில் போட்டியாளராகவும் பங்கு பெற்று வருகிறார்.
அந்த வகையில் பிரபல மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியின் மூலம் தனது கணவரை அறிமுகப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைய செய்தார். நிகழ்ச்சியில் இவர்களின் காதல் கதை ரசிகர்களுக்கு தெரியவந்ததால் இவர்களுக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் உருவானது.
எனவே இவர்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளும் வகையில் சொந்தமாக யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்து பல காமெடியான விஷயங்களை ரசிகர்களிடம் பகிர்ந்து வந்தார்கள். இதனைத் தொடர்ந்து மணிமேகலை தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்குபற்று பட்டி தொட்டி எங்கும் பிரபலம் அடைந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த இரு வாரங்களாக மணிமேகலை நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை. அந்த வகையில் தற்போது இவர் தனது கணவருடன் நீண்ட தூரம் காரில் பயணம் சென்று நடுரோட்டில் தாறுமாறாக குத்தாட்டம் போட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.
வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.