பைனலுக்கு வந்த குக் வித் கோமாளி.! பிரபல நடிகரின் கையால் பட்டத்தைப் பெற்றாரா இவர்.!

kuk with comali 3

பிரபல விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகள் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் கடந்த 2 வருடங்களாக டி ஆர் பி-யில் முன்னணி ஷோவாக வலம் வந்து கொண்டிருப்பது குக் வித் கோமாளி. குக் வித் கோமாளி நிகழ்ச்சி அறிமுகமானதற்கு பிறகு விஜய் டிவியின் டிஆர்பி எங்கேயோ போய்விட்டது.

இந்த நிகழ்ச்சி மிகவும் காமெடியாகவும், சுறுசுறுப்பாகவும் போய்க் கொண்டிருப்பதால் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் ஆதரவை பெற்று வருகிறது. அதுமட்டுமல்லாமல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்களுக்கு எப்படி படவாய்ப்புகள் கிடைக்கிறதோ அதே போல குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் ஒரு சிலருக்கும் பட வாய்ப்புகள் கிடைத்து வருகிறது.

அந்தவகையில் சிவாங்கி, பாலா, புகழ் உள்ளிட்டோர் தற்பொழுது திரைப்படங்களில் நடித்து வருகிறார்கள். இந்நிலையில் இந்நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் பைனல் நடக்க உள்ளது. அந்த வகையில் இந் நிகழ்ச்சியின் இறுதியில் பாபா பாஸ்கர், ஷகிலா மற்றும் பவித்ரா, அஸ்வின், கனி ஆகியோர் கலந்து கொண்டு உள்ளார்கள்.

இந்நிலையில் இந்நிகழ்ச்சியின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும் அதில் அஸ்வின் மூன்றாவது இடத்தையும் சசிகலா இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளதாக கூறப்படுகிறது.

kuk with comali 2
kuk with comali 2

இவர்களைத் தொடர்ந்து இந்நிகழ்ச்சியின் வின்னராக கனி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  அந்த வகையில் இந்நிகழ்ச்சிக்கு சிம்பு தான் சிறப்பு விருந்தினராக வந்துள்ளார். எனவே சிம்பு கனிக்கு டைட்டில் பட்டம் வழங்கி உள்ளார் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் பொழுது ஐந்து மணி நேரம் ஒளிபரப்பாகும் என்றும் தெரிவித்துள்ளார்கள்.