தற்பொழுது உள்ள அனைத்து தொலைக்காட்சிகளும் போட்டி போட்டுக்கொண்டு சுவாரஸ்யமான சீரியல்கள் மற்றும் ஷோக்களை ஒளிபரப்பி வருகிறார்கள். அந்தவகையில் டிஆர்பி-யில் தொடர்ந்து முதலிடத்தை பிடித்து வரும் தொலைக்காட்சி விஜய் டிவி.
விஜய் தொலைக்காட்சியில் பல ரியாலிட்டி ஷோக்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவை பெற்று வருகிறது அந்த வகையில் முதலில் நல்ல ஆதரவை பெற்று வந்த நிகழ்ச்சி பிக்பாஸ் இதனை தொடர்ந்து தற்போது பிக்பாசை மிஞ்சும் அளவிற்கு ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி உள்ளது குக் வித் கோமாளி.
முதல் சீசனை தொடர்ந்து தற்போது இரண்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. முதல் சீசனை விட இரண்டாவது சீசனில் காமெடிக்கு பஞ்சம் இல்லாமல் இருந்து வருவதால் இந்நிகழ்ச்சி எப்பொழுது வெளிவரும் என ரசிகர்கள் காத்து வருகிறார்கள்.
இந்த நிகழ்ச்சி பிரபலம் அடைவதற்கு முக்கிய காரணமாக திகழ்பவர்கள் கோமாளிகள் தான் அந்தவகையில் சிவாங்கி, மணிமேகலை,பாலா, புகழ் என்று அனைவருமே ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து உள்ளார்கள்.
இந்நிலையில் இந்த வாரம் தான் இறுதி நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. அதில் இந்த வாரம் நடந்த போட்டியில் அஸ்வின் மற்றும் கனி இறுதி நிகழ்ச்சிக்கு தேர்வாகியுள்ளார். அவ்வ போது எடுத்த புகைப்படம் இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.