சைலெண்டாக திருமணத்தை நடத்தி முடித்த குக் வித் கோமாளி புகழ்..! இதோ புகைப்படங்கள்.

pukazh
pukazhpukazh

சின்னத்திரையில் பிரபலம் அடைந்து தற்போது வெள்ளி திரையில் கால் தடம் பதித்து பல படங்களை கைப்பற்றி நடித்து வருபவர் காமெடி நடிகர் புகழ். இவர் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் காமெடியனாக பங்கு பெற்றார் இதன் மூலம் ஓரளவு ரசிகர்களை பெற்றிருந்த புகழ் பின்பு குக் வித் கோமாளி..

என்னும் சமையல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களை என்டர்டைன்மென்ட் செய்து வந்தார்.  இந்த நிகழ்ச்சியில் இவர் ரியாக்ஷன், பாடி லாங்குவேஜ், பேச்சு போன்ற அனைத்தும் மக்களை வெகுவாக கவர்ந்து இழுத்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியையே புகழ் வேற இடத்திற்கு கொண்டு சென்றார்.

மேலும் புகழும் ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் என அனைவர் மத்தியிலும் பிரபலமடைந்து சினிமாவில் ஒவ்வொரு திரைப்பட வாய்ப்பாக கைப்பற்றினார். அந்த வகையில் எடுத்த உடனேயே புகழ் அஜித் சூர்யா போன்ற டாப் நடிகர்களின் படங்களில் காமெடியனாக நடித்து அசத்தினர். மேலும் புகழ் மிஸ்டர் ஜி கீப்பர் என்ற ஒரு திரைப்படத்தில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார்.

தற்போது சினிமாவில் மிக பிஸியாக இருந்து வரும் புகழ் அவ்வப்போது சின்னத்திரை பக்கமும் தலைகாட்டி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் குக் வித் கோமாளி ஒரு எபிசோட்டில் புகழ் அவரது காதலி குறித்து மனம் திறந்து பேசினர். நான் பென்சி என்ற பெண்ணை ஐந்து வருடங்களுக்கு மேலாக காதலித்து வருவதாக கூறினார் மற்றும் இந்த ஆண்டு இறுதிக்குள்ளே எங்கள் திருமணம் நடைபெறும் என கூறியிருந்தார்.

புகழ் அவரது திருமணத்திற்காக ப்ரீ வெட்டிங் ஷூட்டிங் கூட அண்மையில் நடத்தி உள்ளார் அந்த புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியது. இந்த நிலையில் தற்போது சைலண்டாக புகழ் பென்சியை திருமணம் செய்து கொண்டார். ஆம் புகழ் மற்றும் பென்சியின் திருமண புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.