இந்திய கேப்டன் “ரோகித் சர்மா” உடன் வீடியோ காலில் பேசிய குக் வித் கோமாளி புகழ் – இணையதளத்தில் வைரலாகும் வீடியோ.!

rohit
rohit

சின்னத்திரை மூலம் பிரபலம் அடைந்த பல நடிகர் நடிகைகள் தற்போது வெள்ளி திரையில் சிறப்பாக ஜொலித்து வருகின்றனர். சினிமாவில் பயணிக்க ஆசைப்படும் நடிகர் நடிகைகளுக்கு எடுத்த உடனேயே அந்த வாய்ப்பு கிடைத்து விடாது முதலில் கிடைக்கின்ற வாய்ப்பை பயன்படுத்தி அதன் மூலம் கொஞ்சம் கொஞ்சமாக பிரபலம் அடைந்து பின்பு சினிமாவில் கால் தடம் பதிக்கின்றனர்.

அதற்கு சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் பல நிகழ்ச்சிகள் அடித்தளமாக அமைகின்றன. குறிப்பாக விஜய் டிவியின் மூலம் பிரபலமடைந்த பலரும் சினிமாவில் பயணித்து வருகின்றன. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி பல கலைஞர்களை வெள்ளி திரைக்கு அனுப்பி வைத்துள்ளது. இதில் கோமாளியாக கலந்து கொண்டு உலகமெங்கும் பிரபலம் அடைந்தவர் புகழ்.

இவர் இந்த நிகழ்ச்சியில் அடிக்கும் டைமிங் காமெடி, ரியாக்சன் போன்றவை மக்கள் பலருக்கும் பிடித்துப் போகவே பல ரசிகர்கள் உருவாக்கினர். இதன் காரணமாகவே தற்போது வெள்ளித்திரையிலும் சில படங்களில் நடித்து வருகிறார். அப்படி இதுவரை சூர்யாவுடன் எதற்கும் துணிந்தவன், அஜித்தின் வலிமை போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் காமெடியனாக நடித்திருந்தார்.

இந்த படங்களை தொடர்ந்து தற்போதும் பல படங்களில் கமிட் ஆகி பிஸியாக நடித்த வருகின்ற புகழ் ஹீரோவாக கூட ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் காமெடி நடிகர் புகழ் சமூக வலைதளங்களில் அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தொடர்ந்து வெளியிட்டு வருவார். அப்படி தற்போது ரசிகர்களுக்கு ஷாக்கான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

rohit
rohit

புகழ் கிரிக்கெட் வீரர் ரோகித்துடன் வீடியோ காலில் உரையாடுவது போன்ற வீடியோவை வெளியிட்டுள்ளார். மேலும் அந்த வீடியோவில் ரோஹித்தை மச்சி என கூப்பிட்டதால் ரசிகர்கள் பலரும் இவ்வளவு நெருக்கமா இருவருக்கும் என கமெண்ட் அடித்து வருகின்றனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதள பக்கங்களில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. இதோ அந்த வீடியோ.